Viral
இப்படியும் சிலர்.. 20 ஆண்டுகளாக பஞ்சு மெத்தையை சாப்பிட்டு உயிர் வாழும் இளம் பெண்!
நாம் எல்லோரும் சிறு வயதாக இருக்கும் போது மண், பேப்பர், பெண்சில் போன்று நம் கையில் கிடைப்பதை எல்லாம் கடித்துச் சாப்பிட்டு இருப்போம். ஆனால் சிலர் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டி இருப்பார்கள். பிறகு வளரவளர இந்த பழக்கத்தைக் கைவிட்டு விடுவார்கள். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 20 ஆண்டுகளாகப் பஞ்சு மெத்தை சாப்பிட்டு வருவதை பழக்கமாக கொண்டு உள்ளதாக கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெனிபர். இவர் தனது 5 வயதில் காரின் சீட்டில் இருக்கும் பஞ்சை முதலில் சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதன் சுவை அவருக்கு பிடித்துபோக தினமும் பஞ்சை சாப்பிட ஆரம்பித்துள்ளார். நாளடைவில் இதற்கு அவர் அடிமையாகவே ஆகியுள்ளார்.
இப்படி 20ஆண்டுகளாகத் தினமும் பஞ்சை சாப்பிட்டு வருகிறார். ஒரு நாளைக்கு ஒரு சதுர அடி பஞ்சு மெத்தையைச் சாப்பிடுகிறார். மேலும் தனது முழு மெத்தையைச் சாப்பிட்டு முடித்த இவர், தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டுத் தீர்த்துள்ளார். இந்த பழக்கத்தை அவரால் விட முடியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் ஜெனிபர் கூறியுள்ளார்.
மேலும், பஞ்சு மெத்தையைச் சாப்பிடுவதால் தனக்கு வாயுத் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இது எனது உடலுக்குள் சென்று பிறகு வெளியேறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் பஞ்சு மெத்தையைச் சாப்பிட்டு வந்தாலும் அவருக்கு எந்தவிதமான உடல் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.
இருப்பினும் ஜெனிபர் பஞ்சு மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால் கல்லீரல் பாதிப்பு, குடல் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!