Viral
ஹே எப்புட்றா ? 18 வயது இளைஞராக மாறிய 45 வயது பணக்காரர்.. காசு இருந்தால் எல்லாம் நடக்கும் போல ?
முதுமை என்பது பெரும்பாலான மக்களின் கவலையளிக்க கூடியதுதான். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் பெரும்பாலான மனிதர்கள் முதுமை குறித்துதான் அதிக கவலை படுவதாக ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அளவு முதுமை மனிதனை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
முதுமையை தவிர்த்து எப்போதும் இளமையாக தோன்றவேண்டும் என்பதே பெரும்பாலானவர்கள் எண்ணம். அதற்காக தன் வருமானத்தில் பெரும்தொகையை செலவுசெய்ய கூட பலர் தயாராக இருக்கிறார்கள். முதுமையை தவிர்க்க முடியுமா என்பது குறித்த ஆய்வும் தொடர்ந்து நடந்தே வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு 45 வயது பணக்காரர் ஒருவர் தனது 18 வயது இளைஞனாக தோற்றமளிக்க ஆண்டுக்கு 16 கோடி ரூபாயை செலவு செய்யும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பிரையன் ஜான்சன். இவர் பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.
உடல் ஆரோக்கியம் குறித்த விவகாரத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவருக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால், தனது வயது 18 வயது இளைஞர் போல தோற்றம் தரவேண்டும் என முடிவு செய்த அவர், தனது வீட்டின் ஒரு பகுதியை ஆய்வகமாக மாற்றி அதில் 0 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
அந்த மருத்துவ குழுவினர் தினமும் பிரையன் ஜான்சனின் உடலை ஆய்வு செய்து அவரின் உடல் உறுப்புகளை இளைஞரின் உடல் உறுப்புகளை போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நுரையீரல், தோல் தோற்றம், இதய செயல்பாடுகள் ஆகியவற்றில் ஒரு இளைஞருக்குரிய வகையில் மாற்றம் செய்ததாக இவர் கூறியுள்ளார்.
மேலும், உடலில் பிற உறுப்புகளையும் இளைஞர் போன்ற செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் பிரையன் ஜான்சன் கூறியுள்ளார். இந்த செயல்பாடுகளுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 16 கோடியை இவர் செலவு செய்வதாகவும், இந்த முயற்சி வெற்றிபெற்றால் அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!