Viral
Spotify-ஐ விட்டுவைக்காத layoff.. 400 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு: பீதியில் ஊழியர்கள்!
உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.
ஐடி நிறுவனங்களில் மட்டும் இப்படி ஊழியர்கள் பணிநீக்கம் நடப்பது இல்ல. அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து வருகிறது. மேலும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது.
நேற்றுதான் விப்ரோ நிறுவனம் 452 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் அடுத்தபடியாக மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify தனது நிறுவனத்தில் இருந்து 400 பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து spotify நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஏக், "ஊழியர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், செலவுகளைக் குறைக்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கடினமான ஒன்றுதான். ஆனால் இப்போது தேவையான முடிவாகும்". இந்த முடிவுக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுதான் Spotify நிறுவனத்தில் உலகம் முழுவதும் 6600 பணியாளர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஊழியர்களில் இருந்துதான் 6% அதாவது 400 பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக Spotify நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதால் ஐடி போன்ற மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தலை மீது பணி நீக்கம் என்ற கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது என்ற அச்சதிலேயே வேலைபார்த்து வருகின்றனர்.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்