Viral

லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பறந்த கர்நாடக கொடி -இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

பொதுவாக பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டில் கல்வி கற்க செல்வர். அது இளநிலையாக இருந்தாலும் சரி, முதுநிலையாக இருந்தாலும் சரி, வெளிநாட்டில் நல்ல கல்வி தரம் இருப்பதாக எண்ணி அங்கே சென்று படிப்பர்.

அதிலும் முதுநிலை கல்வி கற்பவர்களே அதிகம். இந்தியாவில் குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் மேல்நிலை படிப்பை படித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா, கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் லண்டனில் படித்து பட்டம் பெற்றுள்ளார். அப்போது அவர் பட்டம் பெரும்போது தனது மாநிலத்தின் அடையாளமான கர்நாடகாவின் கொடியை காட்டி விட்டு பட்டம் வாங்கியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாட்டை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அங்கு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பட்டத்தை பெற்றனர்.

அப்போது அதில் தேர்ச்சி பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர் மேடைக்கு பட்டத்தை வாங்க சென்றார். சென்றபோது தனது கையில் தனது மாநில கொடியையும் கொண்டு சென்றுள்ளார். பிறகு மேடைக்கு சென்ற அவர், மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர் தனது கையில் வைத்திருந்த கன்னட கொடியை கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக நடந்து சென்றார்.

தொடர்ந்து பட்டத்தை வழங்கியவர்க்கும் கை குலுக்கிய பின்னர் அவர் அங்கிருந்து தனது பட்டத்தை வாங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதோடு இது தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாணவர் அதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் லண்டன் சிட்டி யுனிவர்சிட்டி - பேய்ஸ் பிசினஸ் ஸ்கூலில் (காஸ்) நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றேன். இங்கிலாந்தின் லண்டனில் நடந்த விழாவில் கர்நாடக மாநிலக் கொடியை நான் ஏற்றியது பெருமைக்குரிய தருணம்." என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கர்நாடகாவில் உள்ள பெலகவி பகுதி ஒரு கல்லூரி விழாவின்போது கர்நாடக கொடியை சில மாணவர்கள் ஏந்தியதால், அவர்களுக்கும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வெளிநாடுகளில் இந்திய கொடி ஏந்துவர், ஆனால் இங்கு மாநில கொடியை பிடித்து மாணவர் ஒருவர் பட்டம் வாங்கியுள்ளது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Also Read: மீட்டிங் வரச்சொல்லி 3000 பேரை வேலையை விட்டுத் தூக்கிய Goldman Sachs நிறுவனம்: தினம் ஒரு layoffs!