Viral

“ஜனவரி மாதம் முழுவதும் பண்பாட்டு - கலாச்சார திருவிழாக்கள்” : தமிழரின் பெருமையை பறைசாற்றும் தி.மு.க அரசு!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே இது அனைவருக்குமான திராவிட மாடல் அரசு என்பதைத் தனது செயல்பாடுகள் மூலமாக நிரூபித்துக் காட்டி வருகிறார். மக்கள் திட்டங்களை மட்டும் நிறைவேற்றாமல் தமிழர்களின் பண்பாட்டையும், மொழியையும் பாதுகக்க வேண்டும் என்ற உன்னதநோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதில் ஒன்றுதான், 'அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள்'. இந்த விழா மூலம் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல் இந்த திட்டம் அமைந்துள்ளது.

மேலும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மூத்த முன்னோடிகளான தோழர்கள் என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாக்களில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டுகள் நடைபெறும்.

இந்த வகையில், தமிழகர்களின் பெருமையை இந்த உலகத்திற்கே எடுத்துக் காட்டும் வகையில், ஜனவரி மாதம் மட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திருவிழாக்கள் தமிழர்களின் வீரம், பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை இலக்கியத் திருவிழாவை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அன்று மாலையே சென்னை புத்தகக் காட்சியைத் தொடக்கி வைத்தார். சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதேபோல் சென்னை இலக்கிய திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது.

மேலும் அயலகத் தமிழர் நாள் ஜனவரி 11 முதல் 12 வரையும், சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊர்த் திருவிழா ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. சமத்துவப் பொங்கல் திருவிழா ஜனவரி 15 முதல் 16 வரையும், ஏறு தழுவுதல் ஜனவரி 15 முதல் 18 வரையும் நடைபெறுகிறது.

அதோடு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இந்த புத்தகக் காட்சி சென்னையில் 16 முதல் 18 வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

இதுமட்டுமல்லாது தமிழர் விருதுகள், கீழடி அருங்காட்சியகம் திருப்பு விழா, மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவுகள் தொடக்க விழா, பள்ளி மாணவர்கள் மாநிலக் கலைத் திருவிழா என ஜனவரி மாதம் முழுவதும் தமிழர்களின் பெருயை கொண்டாட்டத்துக்குப் பஞ்சமில்லாத வகையில் ஒரு பெரிய லிஸ்டே உள்ளது.

"நாங்கள் பழம்பெருமை மீது பற்று கொண்டவர்கள். பழமை வாதிகள் அல்ல" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெறும் வார்த்தையாகக் கடந்து விடாமல் அதைச் செயல்வடிவமாகவே காட்டி நான் தமிழர்களின் முதலமைச்சர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க ஆட்சியில் செய்த சாதனைகளை RN.ரவி பட்டியலிட முடியுமா?” : சாட்டை சுழற்றும் முரசொலி !