Viral
யார் சாமி இவன்.. 12 ஆண்டுக்கு - ரூ. 2.4 கோடி: சொகுசு கப்பலில் குடியிருப்பை வாங்கிய 28 வயது வாலிபர்!
நம்மில் பலருக்கும் வேலைகளை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றி வருவது எல்லாம் மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். அதற்குக் காரணம் வேலை அல்லது ஏதாவது ஒரு கமிட்மென்ட் இருக்கும். இருந்தாலும் ஒரு சிலர் ஆறு மாதத்திற்கு வேலை மீதி ஆறு மாதத்திற்கு ஊர் சுற்றிப் பார்ப்பது என திட்டத்துடன் செயல்படுவது உண்டு.
கொரோனா காலத்தில் work forme home அறிமுகமான பிறகு சிலர் சுற்றுலா செல்லும் இடங்களிலேயே வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் சுற்றுலா மற்றும் வேலை இரண்டும் நடந்து விடுகிறது. ஆனால் இதுவும் சில நாட்களுக்கு மட்டும்தான். மற்ற சிலர் விடுமுறை நாட்களில்தான் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் எங்காவது சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் வேலையும் பாதிக்காமல், உலகத்தையும் சுற்றிப்பார்க்கும் வகையில் ரூ.2.48 கோடி செலவு செய்து 12 ஆண்டுகளுக்கு சொகுசு கப்பலில் ஒரு அப்பார்ட்மெண்டையே லீசுக்கு வாங்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஸ்டின் வெல்ஸ். இவர் மெட்டா நிறுவனத்தில் ரியாலிட்டி பிரிவில் வேலைபார்த்து வருகிறார். இந்த இளைஞர் தான் MV Narrative என்ற சொகுசு கப்பலில் 12 ஆண்டுக்கு ஒரு அப்பார்ட்மெண்டை லீசுக்கு எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிஸ்டர் புன்டன், ஷானோன் லீ ஆகியோர் இணைந்து 2016ம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் தான் MV Narrative என்ற பிரம்மாண்டமான சொகுசு கப்பலை தயாரித்து உள்ளது.
இந்த சொகுசு கப்பலில் பள்ளி, கல்லூரி, ஆன்லைன் வசதி, வங்கி, திரையரங்கம், உணவகம், நூலகம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் என ஒரு குட்டி நகரமே கப்பலில் உள்ளது. அதோடு 547 வீடுகளும் இருக்கிறது.
MV Narrative கப்பலின் முதல் பயணம் 2025ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. 1000 நாளில் 6 கண்டங்களுக்குச் செல்ல உள்ளது. மேலும் ஒவ்வொரு துறைமுகத்திலும் மூன்று நாட்கள் இந்த கப்பல் நின்று செல்ல உள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்நிலையில்தான் ஆஸ்டின் வெல்ஸ் ஒரு அப்பார்ட்மெண்டையே லீசுக்கு எடுத்துள்ளார். இது குறித்து கூறும் வெல்ஸ், " வீட்டில் இருந்து பணியாற்றுவதில் சுவாரசியம் இல்லை. இதனால் சொகுசு கப்பலில் அப்பார்ட்மெண்டை லீசுக்கு எடுத்துள்ளேன். இதன் மூலம் உலகை சுற்றி வர உள்ளேன். கடல் அழகை ரசித்துக் கொண்டே எனது அலுவலக வேலைகளையும் பார்க்கப்போகிறேன். விமானம் மூலம் சென்ற பிறகு, ஒரு ரூமை வாடகைக்கு எடுத்தால் போதும். இப்போது உலகமும் என்னுடன் பயணிக்கப்போகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?