Viral

OnePlus அடுத்து IPhone.. ரூ.1.50 லட்சம் கொடுத்து IPhone14 Pro வாங்கிய பயனர்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு போன், ஐ போன் என இரண்டு வகையான போன்களின் ஆதிக்கம் தான் உலகம் முழுவதும் உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தான் விலை உயர்ந்தவையாக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு போன்களை விட கவர்ச்சியாக ஐபோன் இருப்பதால் இந்த போனை ஒரு முறையாவது வாங்கி பயன்படுத்தவேண்டும் என்பதே தற்போதைய இளைஞர்களின் ஆசையாக உள்ளது.

இது வரை ஆப்பில் நிறுவனம் 14 ஐபோன் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுதான் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமானது. இதன் விலை ரூ.1,29,000 ஆகும். இதையடுத்து 2023ம் ஆண்டு ஐபோன் 15 சீரிஸை ஆப்பில் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபோன் 14 சீரிஸ்க்கு ios 16ஐ இன்ஸ்டால் செய்வதற்கான அப்டேட் வந்துள்ளது. இதனால் பயனர்கள் இதை அப்டேட் செய்துள்ளனர். அப்போது அவர்களது செல்போனில் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் தெரிவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் மென்பொருள் சிக்கலால் இந்த கோடுல் தெரியலாம் எனவும் செல்போன் தொழில்நுட்ப வல்லுர்கள் கூறுகின்றனர். அதேபோல் எல்லா ஐபோன் 14 சீரிஸ்களிலும் இப்படி கோடுகள் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஐபோனில் இப்படிச் சிக்கல் ஏற்படுவது முதல்முறை அல்ல. எப்போது புதிய ஐபோன் சீரி அறிமுகம் செய்யும்போதும் இப்படியான தொழில்நுடப சிக்கல்கள் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை செல்போனில் கேமரா லென்ஸ் காரணமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மங்கலாகத் தெரிந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு இப்பிரச்சனைக்கு ஐபோன் நிறுவனம் தீர்வு கண்டது.

தற்போது அதே ஐபோன் 14 ப்ரோ வகை செல்போனில் கோடுகள் தெரிவது புதிய சிக்கலை ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கிய செல்போனில் கோடுகள் தெரிவதால் ஐபோன் பயனர்கள் வேதனையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு Oneplus நிறுவனம் மீதும் இதுபோன்று குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாரிசு AUDIO LAUNCH : “எனக்கு போட்டியாளர் இவரு தான்..” - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா ?