Viral

“விதிகளை மதித்தால் விபத்தைத் தடுக்கலாம்”: விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது ஹூண்டாய்! #BETHEBETTERGUY

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், அதிக கார்களை விற்பனை செய்து பட்டியலில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

சாலை போக்குவரத்து விதிகளை சரிவரக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்!

* வாகன ஓட்டிகள் எப்பொழுதும் வாகனங்களை சாலையின் இடது பக்கத்தில் இயக்கவேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது கட்டாயம் செல்போன் பேசக்கூடாது. இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது. நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும் காவு வாங்கிவிடும்.

* 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.

* கனரக வாகனங்களில் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம் செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது!

* குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாட்டில் உள்ள 53 பெரிய நகரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 50% அதிகமான உயிரிழப்புகள் சென்னையில் பதிவாகியுள்ளன.

* எனவே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாகத் தவிர்த்து, விபத்துகள் ஏற்படாமல் நம்மையும், சாலைகளில் பயணிப்போரையும் காத்திடுவோம். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.

ஓவர் ஸ்பீடு வேணாம்!

* வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வேகத்தில் செலுத்த வேண்டியது அவசியம். சாலைகளின் வேக வரம்பை மீறி அசுர வேகத்தில் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும். வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக ஓட்டுவது உயிருக்கு உலைவைக்கும்.

* நொடிப்பொழுதில் ஏற்படும் விபத்துகளையும், அதன் விபரீதங்களையும் தவிர்க்கவேண்டும் என்ற சிந்தனையை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைபெறச் செய்யவேண்டும். மித வேகம் மிக நன்று!

சீட் பெல்ட் அணிவீர்!

* ஒருவர் காரில் Seat Belt அணிந்து பயணிக்கும்போது விபத்து நேர்ந்தாலும்கூட, அவர் விபத்தில் உயிரிழப்பதிலிருந்து 61 சதவிகிதம் தப்பித்துவிடுவார் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. எனவே, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

* இருசக்கர வாகன விபத்துகளில் சிக்குவோர் பெரும்பாலும் உயிரிழப்பதற்கு காரணம் அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதுதான் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

* மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

* மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்ற, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

* எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

zebra crossingஇல் மட்டுமே சாலையைக் கடக்கவேண்டும்!

* பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலது ஓரத்தில் நடந்து செல்லவேண்டும். சாலைகளில் zebra crossing இல் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடக்கவேண்டும்.

பாதசாரிகள் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்த்தால் விபத்துகளை ஒரளவு குறைத்துக் கொள்ளலாம். பாதசாரிகள் மஞ்சள்கோட்டுப் பகுதியில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Also Read: ஒருமுறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ ரேன்ஜ் வழங்கும் IONIQ 5 - Hyundai எலெக்ட்ரிக் காரின் சிறப்பு அம்சம் ?