Viral

குடிபோதையில் இருந்த இளம்பெண்.. அறிவுரை கூறிய காவலருக்கு அடி உதை.. வெளியான வீடியோவால் பரபரத்த ஆந்திரா !

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆர்கே பீச் அருகே YMCA என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு சாலையில் ஓரத்தில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்தார். அதோடு கஞ்சாவையும் புகைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பொதுமக்கள், உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) தனது குழுவுடன் சென்றார். அங்கே இருந்த இளம்பெண்ணிடம் அனைவரும் இது தவறு என்றும், உடனே வீட்டிற்கு செல்லும்படியும் கூறினார். மேலும் போலீஸ் அதிகாரியும் பொருடமையாக அந்த இடத்தை விட்டு செல்லும்படி கூறினார்.

ஆனால் போதையில் இருந்த அந்த பெண், தன்னிடம் பேசுவது போலீஸ் என்பதை கூட அறியாமல், அந்த பெண் கண்டபடி பேசினார். அதோடு அந்த பெண் பீர்பாட்டிலை தனது கையில் வைத்து கொண்டு 'என்னுடைய ஆண் நண்பரிடம் சொல்லி உன்னை தொலைத்து விடுவேன்' என்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டினார். அதுமட்டுமின்றி, தனது கால்களால் போலீஸ் அதிகாரி ஒருவரை எட்டி உதைத்தார்.

இதனை கண்ட மற்றொரு போலீஸ், அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், அந்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்தனர். அப்போது அவருடைய மூச்சுக்காற்றில் 148.1 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினரை தாக்கிய குற்றத்திற்காகவும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அந்த பெண் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பெயர் அமுல்யா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி கண்டங்களை எழுப்பி வருகிறது. குடிபோதையில் இருந்த இளம்பெண் ஒருவருக்கு காவலர் ஒருவர் அறிவுரை வழங்கியபோது, ஆத்திரமடைந்த பெண், அவரை தாக்கியுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Hulk Hand.. 2 கையும் 8 கிலோ: அரியவகை நோயால் பாதித்த 16 வயது சிறுவனை ஒதுக்கிவைத்த கிராமம்!