Viral
மூச்சடைக்க வைக்கும் IPhone 15 Ultra செல்போனின் விலை: எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. கொரோனா வந்த பிறகு ஊரடங்கு காரணமா பள்ளி மாணவர்கள் கைகளுக்கும் ஸ்மார்ட் போன் சென்று விட்டது. செல்போனால் நல்லது, கெட்டது என இரண்டும் இருந்தாலும் இனி நம்மிடம் இருந்து பிறக்க முடியாது ஒன்றாக ஸ்மார்ட் போன் மாறிவிட்டது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு போன், ஐ போன் என இரண்டு வகையான போன்களின் ஆதிக்கம் தான் உலகம் முழுவதும் உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தான் விலை உயர்ந்தவையாக இருக்கிறது.
ஆண்ட்ராய்டு போன்கள் ரூ. 10 ஆயிரத்திற்கே அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் ஐ போன்கள் அப்படி இல்லை. அதன் துவக்க விலையே ரூ. 30 ஆயிரம் இருக்கும். இதனால் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் ஒரு கவர்ச்சியான போன் என்றால் அது ஐ போன்தான். இதை ஒருமுறையாவது வாங்க வேண்டும் என்பது தற்போதைய இளைஞர்களின் ஆசையாக உள்ளது.
இது வரை ஆப்பில் நிறுவனம் 14 ஐபோன் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுதான் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமானது. இதன் விலை ரூ.1,29,000 ஆகும். இதையடுத்து 2023ம் ஆண்டு ஐபோன் 15 சீரிஸை ஆப்பில் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐபோன் 15 சீரிஸ் விலை வெளியாகியுள்ளது. ஐபோன் 15 அல்ட்ரா மாடல் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. ஐபோன் வரிசையிலேயே இந்த போன்தான் டாப் எண்ட் மாடலாக இருக்க என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செல்போனின் விலை ஐ போன் 14 சீரிஸ் விலையை விட கூடுதலாக 200 டாலர் இருக்கும். அதாவது இந்திய மதிப்பு படி ரூ.16 ஆயிரம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 15 அல்ட்ரா செல்போனின் விலை ரூ.1,43,000 இருக்கும். இந்த செல்போன் விலையைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்