Viral
Youtubeல் வரும் ஆபாச விளம்பரங்களால் படிக்கமுடியவில்லை: இழப்பீடு கேட்ட இளைஞர்- அதிர்ச்சி அளித்த நீதிமன்றம்
மத்திய பிரதேச மாநிலம் பன்னா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் கிஷோர் செளத்ரி. இவர் போலீஸ்துறைக்கு படித்து வருகிறார். இதனால் சில யூடியூப் சேனல்களை Subscribe செய்துள்ளார். அப்போது அவருக்கு அதில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் தொந்தரவாக இருந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போயுள்ளது.
இதனால் அந்த இளைஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "யூடியூப் சேனல்களில் வரும் ஆபாச விளம்பரங்களால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால்தான் நான் தேர்வில் தோல்வியடைந்தேன். எனவே அதற்கு கூகுள் நிறுவனம் ரூ. 75 லட்சம் இழப்பீடு தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தேவையற்ற வழக்கு என கூறியுள்ளனர். மேலும் விளம்பரம் பிடிக்கவில்லையென்றால் அவற்றைப் பார்க்க வேண்டாம். மாறாக சுய விளம்பரங்களுக்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ஆனந்த் கிஷோர் செளத்ரி ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு அந்த இளைஞரும், தான் வேலைக்கு செல்லவில்லை என்பதால் தன்னிடம் போதிய பணம் இல்லை. எனவே தன்னை மன்னித்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை ஏற்காத நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தற்காக இளைஞருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
'Youtube விளம்பரங்களால்தான் நான் தேர்வில் தோல்வியடைந்தேன்' என்று கூறி 75 லட்சம் இழப்பீடு கேட்ட மும்பை இளைஞருக்கு, 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!