Viral
சொன்ன மாதிரி மைலேஜ் கொடுக்காத பிரபல கார்.. நீதிமன்றம் சென்று ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை பெற்ற நபர்!
பொதுவாகவே கார் அல்லது இருசக்கர வாகனம் என எந்த வாகனமாக இருந்தாலும் அந்த வாகனம் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதைத்தான் நாம் முதலில் பார்ப்போம். இதற்கு பிறகே நாம் வாகனம் வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வோம்.
பெரும்பாலும் இப்படி நாம் வாங்கினாலும் சொன்ன படி வாகனங்கள் மைலேஜ் கொடுப்பதில்லை. இருந்தும் தாம் அதிக விலையைக் கொடுத்து வாங்கிவிட்டதால் இதை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டு அந்த வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருவோம்.
இந்நிலையில், சொன்னபடி கார் மைலேஜ் தராததால் அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்து நுகர்வோர் ஒருவர் ரூ.3.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சவுதாமி பிபி. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் கிளாசிக் வகை காரை ரூ.8,94,876 கொடுத்து வாங்கியுள்ளார். அப்போது இந்த கார் லிட்டருக்கு 32 கி.மீ வரை ஓடும் என ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இவர்கள் சொன்னபடி கார் லிட்டருக்கு 32 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கவில்லை. இது குறித்து அவர் ஷோ ரூம் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இவர்கள் முறையான விளக்கம் கொடுக்கவில்லை. பிறகு இது சரிபட்டு வராது என நினைத்த அவர் திருச்சூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காரின் உண்மையான மைலேஜை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் இதை பிஎச்டி பயின்ற இயந்திரவியல் பேராசிரியர் தலைமையில் நடைபெற வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதையடுத்து, பேராசிரியர் ஒரு லிட்டர் டீசலை மட்டும் நிரப்பிக் கொண்டு காரை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். அப்போது கார் வெறும் 19 கி.மீ மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது. இது குறித்த அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததால் காரின் உரிமையாளருக்கு ரூ.3.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஃபோர்டு நிறுவனம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?