Viral
ம.பி: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு.. தடுமாறிய பேருந்தில் சிக்கி முதியவர் பலி|VIDEO
மத்திய பிரதேசத்தின் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால், நிலை தடுமாறிய பேருந்து விபத்தானத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜபல்பூர் என்ற பகுதியில் மெட்ரோ பேருந்தை ஒன்றை ஹர்தேவ் பால் (60) என்பவர் ஓட்டி கொண்டிருந்தார்.
அப்போது ஜபல்பூரிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே பேருந்தை ஓட்டி வந்துகொண்டிருக்கும் போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நிலைகுலைந்து போன அவர், ஸ்டீயரிங் மீதே மயங்கி விழுந்தார். மேலும் இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையில் இருந்த வாகனங்கள் மீது சரமாரியாக மோதியது.
இந்த விபத்தில் அங்கிருந்த பயணிகள், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் பற்றிய விவரம் ஏதும் அறியப்படவில்லை.
இந்த நிலையில் இந்த கோர விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!