Viral

'நீ வெளியே போ'.. முன்பதிவு பெட்டியில் அமர்ந்து வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்: வேடிக்கை பார்த்த ரயில்வே!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமாக இருந்து வருகிறது. நாடுமுழுவதும் மக்கள் எங்குச் செல்ல வேண்டுமானாலும் முதலில் ரயில் பயணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

வட மாநிலத்தவர்கள் அதிகமாகத் தென்மாநிலங்களுக்குப் புலம் பெயர் தொழிலாளர்களாக வந்து செல்கின்றனர். இப்படி இவர்கள் வந்து செல்வதற்கு ரயில்களையே பயன்படுத்துகின்றனர். இவர்களில் சில பேர் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் பலர் டிக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் பல நேரங்களில் இவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் இடையே அடிக்க பிரச்சனை எழுந்து வருகிறது.

இந்நிலையில் வாரணாசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயில் ஒன்றில் திடீரென வட மாநிலத்தவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டுள்ளனர்.

இதனால் ரயில் பெட்டியில் இருந்த முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ரயிலிலிருந்த போலிஸார் மற்றும் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இருந்தும் ரயில்வே போலிஸார் வட மாநிலத்தவர்களை முன்பதிவு செய்யாத பெட்டிக்கு அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு மீண்டும் சிறிது நேரத்திலேயே ரயில் இயங்கியுள்ளது.

பின்னர், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறுவழியின்றி முன்பதிவு செய்தவர்கள் தங்கள் இருக்கைகளைப் பறிகொடுத்துவிட்டு வட மாநிலத்தவர்களுடன் சென்னை வந்து சேர்ந்த அவலம் நடந்துள்ளது. தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் உரிய முறையில் தடுக்க வேண்டும். மேலும் இப்படியான நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என என பயணிகள் ஆவேசமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: பயணிகள் கவனத்திற்கு.. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்: திக் திக் சம்பவம்!