Viral
பெண்ணின் செருப்பை கவ்வி கொண்டு போன பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ - வனத்துறை அதிகாரி கிண்டல் !
பெண்ணின் செருப்பை கவ்வி கொண்டு போன நீள பாம்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஸ்மார்ட் யுகத்தில் பொதுவாக நாம் அனைவரும் அவ்வப்போது ஸ்மார்ட்டாக நடந்துகொள்வோம். மேலும் சில விலங்குகள் கூட அப்படி தான் நடந்துகொள்கிறது. தற்போதுள்ள இணைய உலகில் பல்வேறு விஷயங்கள் வைரலாகி வருகிறது.
குறிப்பாக குழந்தைகள் முதல் பறவைகள், விலங்குகள் என அனைவரும் செய்யும் சில குறும்புகள், சேட்டைகள், விநோத செயல்கள் பல இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி ஒரு வைரல் செய்தியை தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.
பொதுவாக பாம்பு என்றால் அனைவரும் நடுங்கி போவர். சிலர் அதனை கடவுள் போல் பாவித்து புத்து - கோயில் என கட்டி பால், முட்டை ஊற்றி வழிபடுவது வழக்கம். அப்படி சிலர் அதீத மூடநம்பிக்கையால் தங்கள் உயிரையும் பலி கொடுத்துள்ளனர்.
அப்படி தான் ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே, அடிக்கடி பாம்பு கனவு வந்ததால் ஜோசியரை நாடிய ஒருவர், பாம்பு புற்று முன்பு தனது நாக்கை நீட்டியுள்ளார். அப்போது புற்றில் இருந்து வெளியே வந்த பாம்பு அவரது நாக்கை கொத்தியுள்ளது. இதில் அவரது நாக்கு முழுவதும் விஷம் பரவ, அவரது நாக்கை வெட்டியெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வு நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வட இந்தியாவை சேர்ந்த பகுதி ஒன்றில் பாம்பு ஒன்று செருப்பை கவ்வி செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நீளமான பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓரமாக நின்றுள்ளனர். அப்போது அது ஒருவரது வீட்டிற்குள் நுழைய பார்க்கிறது, இதனை கண்ட ஒரு பெண், தனது ரப்பர் செருப்பை அந்த பாம்பை நோக்கி தூக்கி வீசுகிறார். உடனே அந்த செருப்பை பாம்பு தனது வாயால் கவ்வி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்த பிரவீன் கஸ்வான், ''பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கால்களும் இல்லை. இது எந்த இடத்தில் என்று தெரியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை சுமார்
பொதுவாக விலங்குகள் தொடர்பான வீடியோக்களை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த பாம்பு வீடியோவும் அனைவராலும் ஆச்சரியத்துடன் பார்த்து பகிர வருகிறது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !