Viral
“எங்களுக்கு தேவை மரியாதை..” - பாத்திரம் கழுவ சொன்ன மேலாளர்.. ராஜினாமா செய்த Mc Donald நிறுவன ஊழியர் !
தன்னை பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மெக் டொனால்ட் நிறுவனத்தில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதுள்ள உலகில், அனைத்து மக்களும் விரும்பி சுவைக்கு ஒரு உணவு தான் Fast Food (துரித உணவு). அதாவது நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், ஷவர்மா, பீட்ஸா, பர்கர், fried சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை தான் Fast Food என சொல்லப்படுகிறது.
இது போன்ற Fast Food உணவு வகைகளை தயாரித்து விற்கும் நிறுவனங்கள் தான் KFC, மெக் டொனால்டு நிறுவனங்கள். இது போன்ற நிறுவனங்களில் பீட்ஸா, பர்கர், பிரைடு சிக்கன், பிரெஞ்சு பிரைஸ், கோக் உள்ளிட்டவைகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
உலகமெங்கும் இயங்கும் இந்த நிறுவனங்களில் பல்வேறு நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பியான் மெக்காலம் என்பவர் அங்குள்ள மெக் டொனால்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, இந்த இளைஞர் தனக்கான வேலையை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் சிங்கை (Sink) பார்த்துள்ளார். அப்போது அதில் பாத்திரங்கள் அதிகமாக கிடந்துள்ளது. இதனால் ஊழியர்களை அவர் திட்டினார். மேலும் இந்த இளைஞர் பியானை அழைத்த அவர், இந்த பாத்திரத்தை கழுவி வைக்க கூறியுள்ளார்.
அப்போது இது தனக்கான வேலை இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் இந்த இளைஞரிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். இதனால் பொறுமை இழந்த அந்த இளைஞர், தனது மொபைல் போனில் உள்ள டிக்டாக்கை ஓபன் செய்து, இது தொடர்பான வீடியோவை லைவாக வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், உணவகத்தின் சிங்கை காண்பித்து, "இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் எனது மேனேஜர்என்னை கழுவ சொல்கிறார். இது எனது வேலை இல்லை. அதனால் நான் இந்த வேலையை ராஜினாமா செய்கிறேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களிடமும் தான் வேலையை விட்டு செல்வதாக கூறி வெளியேறும்போது, மற்ற ஊழியர்கள் சமாதானம் செய்து வைக்க முயன்று நிற்க சொல்கிறார்கள். இருப்பினும் அவர் தனது சுய மரியாதையை காப்பாற்ற வேலையை விட்டு வெளியேறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். நியூசிலாந்தில் மொத்தம் மெக் டொனால்ட் நிறுவனம் 170 கிளைகள் உள்ளது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!