Viral

இவரையும் விட்டுவைக்கலயாடா நீங்க ?.. இணையத்தில் வைரலாகி வரும் வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்!

தமிழ்நாட்டில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதையடுத்து தற்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தாலும் குளிர் அதிகமாகிவிட்டது. டிசம்பர் துவக்கத்திலிருந்துதான் குளிர் ஆரம்பிக்கும். ஆனால் தற்போது நவம்பரிலேயே கடும் குளிர் நிலவி வருகிறது.

குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை 5 மணியிலிருந்தே குளிர் அடிக்கிறது. இதனால் சென்னை ஊட்டிபோல் மாறியுள்ளது. இதனால் காலையிலேயே வேலைக்கு செல்பவர்கள் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில்,"சென்னையில் இப்படி நடப்பது முதல் முறையல்ல. 1976ம் ஆண்டு முதலே இப்படி ஒரு சூழல் உள்ளது.

நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தமோ அல்லது புயலோ தமிழக கடலோரத்தில் மழையைக் கொடுக்காமல் அப்படியே தங்கியிருந்தால் கடுங்குளிர்தான் ஏற்படும். இதற்குச் சிறந்த உதாரணம் சென்னையில் நேற்றைய தினம் ஊட்டியாக இருந்ததுதான்" என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை ஊட்டி ஆனதும் என் வீட்டில் இது நடக்கும் என ட்விட்டரில் பதிவிட்ட, வீட்டின் சோபாவில் நாய் மற்றும் பூனை சேர்ந்து படுத்துத் தூங்கும் படம் ஒன்றையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த ஜெயானந்த் என்பவர், "ஏன் நமது செல்லப் பிராணிகளுக்கு மேற்கத்தியப் பெயர்கள் சூட்டப்படுகின்றன? நான் இந்தக் கேள்வியைக் எனது நண்பர்களிடம் கேட்டாலும், பெரும்பாலான நண்பர்களும் நண்பர்களும் இன்னும் இதையே செய்கிறார்கள்! இன்னும் காலனித்துவ மனநிலை உள்ளதா?" என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த கேள்விக்கு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிலளித்துள்ளார். அந்த பதிவில், 'அடுத்த முறை நான் நான் செல்லப்பிராணியை வாங்கும்போது, அதற்கு ஜெயானந்த் என்று பெயரிடுவேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், புண்படுத்தக்கூடாது" என தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர்களின் உரையாடல்களைப் பார்த்த இணையவாசிகள் பலரும் 'இவரையும் விட்டுவைக்கலயாடா நீங்க'? என ஜெயானந்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

Also Read: #FIFA2022 :மைதானத்தில் பீருக்கு தடை.. கோக்ககோலா ஸ்டிக்கரை ஒட்டி நூதனமாக பீர் கடத்திய முரட்டு ரசிகர் !