Viral
ஐயப்ப பக்தருக்கு தசை பிடிப்பு.. காரில் இருந்து இறங்கி முதலுதவி செய்த அமைச்சர்.. கேரளாவில் நெகிழ்ச்சி !
காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் நின்ற ஒரு ஐயப்ப பக்தருக்கு கேரளா மாநில அமைச்சர் ஒருவர் கால் பிடித்துவிட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை கார்த்திகை மாதம் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும். இதனால் பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கு சென்று வழிபடுவர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு மண்டல பூஜை கடந்த 16-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த கோயிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோடி கணக்கில் பக்தர்கள் வருகை புரிவர்.
அடுத்த மாத இறுதி வரை நடைபெறவிருக்கும் இந்த மண்டல பூஜைக்கு சென்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக டிக்கெட் புக் செய்யலாம். மேலும் இந்த மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழ்நாட்டில் கேரளா, சபரிமலைக்கு சிறப்பு பேருந்தும் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண்டல பூஜை தொடங்கி 3 நாட்கள் ஆகும் நிலீயல், பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதில் பக்தர்கள் எந்தவொரு வாகனத்திலும் செல்லாமல், முழு நடைப்பயணமாகவும் வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வலிகளையும் பெரிதாக பொருட்படுத்தாமல் நடைபாதையாக நடந்து வருகின்றனர்.
அங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 1,300 கேரள காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக காவல்துறையினரும், மத்திய அதிரடி விரைவு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின நலத்துறை, தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பக்தர் திடீரென காலை பிடித்து கொண்டு நின்றுள்ளார்.
இதனை கண்ட அமைச்சர், தான் வந்துக் கொண்டிருந்த காரை நிறுத்தி வெளியே இறங்கி நின்று கொண்டிருந்த பக்தரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது காலில் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூற, உடனே அமைச்சர் தனது கைகளால் பக்தரின் காலை பிடித்து மசாஜ் செய்துள்ளார். பின்னர் அவருக்கு லேசாக சரியானதும் மீண்டும் மலையேற தொடங்கினார்.
அமைச்சர் பக்தருக்கு கால்களை பிடித்து விடுவது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. காலில் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் நின்ற ஒரு ஐயப்ப பக்தருக்கு கேரளா மாநில அமைச்சர் ஒருவர் கால் பிடித்து மசாஜ் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?