Viral

59 வயதில் விவாகரத்து.. 69 வயதில் திருமணம்.. -‘லோக் அதாலத்’ முறையால் மீண்டும் இணைந்த தம்பதி.. நெகிழ்ச்சி!

விவாகரத்து வேண்டி வழக்குத்தொடுத்த 59 வயது முதியவர், தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக கணவன் மனைவியாக வாழ்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பெரிய மனஸ்தாபம் காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த விவாகரத்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. விவாகரத்து பெறுவதற்கு வயது வரம்பும் இல்லை.

இந்தியா முதல் உலகளவில் கணவன் மனைவி விவாகரத்து பெறுவதற்கு சட்டங்கள் உள்ளது. இருப்பினும் கணவன் மனைவி அவசரப்பட்டு விவாகரத்து பெற்று தனித்தனியே வாழக்கூடாது என்பதற்காக சிறிது காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவாகரத்து கொடுப்பதற்கு நீதிமன்றம் காலதாமதம் எடுக்கும்.

மேலும் 'லோக் அதாலத்' என்ற முறை மூலமும் சமரசம் பேசி தம்பதியினரை மீண்டும் சேர்த்து வைக்கும் வேலைகளையும் நீதிமன்றம் செய்து வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான வழக்குகளை இந்த முறை மூலம் சமரசம் பேசி முடித்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், தும்குரு என்ற பகுதியை சேர்ந்த முதிய தம்பதியினர் தங்களுக்கு விவாகரத்து வண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை முதியவர் தனது 59 வயதில் தொடுத்தார். அந்த வழக்கு பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது நடைபெற்ற லோக் அதாலத் முறையில் இந்த வழக்கும் பங்கேற்றது.

அதில் இருவரிடமும் சமரசம் பேசப்பட்டது. பின்னர் இருவரும் தாங்கள் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தனர். மேலும் இவர்களது குடும்பத்தினரும் இதற்கு விடா முயற்சி செய்து வந்தனர். எனவே தாங்கள் மீண்டும் இணைவதில் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்து எந்த நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டனரோ, அதே நீதிமன்ற வளாகத்தில் இருவரும் மீண்டும் மாலை மாற்றி இனிப்பு பரிமாறி தங்கள் உறவை புதிப்பித்து கொண்டனர்.

இந்த தம்பதியோடு சேர்ந்து 5 தம்பதியினர் தங்கள் விவாகரத்து முடிவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவர் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிகரெட் பிடித்துக்கொண்டே மாரத்தான்.. 3 மணி நேரத்தில் 42 கி.மீ ஓடி கவனம் ஈர்த்த சீன முதியவர்.. வைரல் !