Viral
ச்சே என்ன ஒரு காதல் கதை.. 4 மாதம் - 8 நாடுகள் சைக்கிளில் பயணம்: 44 ஆண்டுகள் கடந்தும் தொடரும் காதல்!
ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி போன்ற காதல் காவியங்கள் தான் இன்றும் காதலர்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இந்த 21வது நூற்றாண்டிலும் காதல் ஒன்றுதான் அழியாமல் பலரையும் வாழவைத்து வருகிறது. காதல் பலரின் வாழ்க்கையே மாற்றியுள்ளது.
அப்படி காதலால் தனது வாழ்க்கை தலைகீழாக மாறிய ஒருவரை பற்றிய கதைதான் இது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரத்யும்ன குமார் மகாநந்தியா. இவரைச் சுருக்கமாக அனைவரும் பி.கே என அழைப்பார்கள்.
இவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளி படிக்கும் போதில் இருந்தே இந்த சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இருந்தும் விடா முயற்சியாக உதவித் தொகையைப் பெற்று டெல்லி கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இவரின் திறமையே ஓவியம்தான்.
இவர் சோவியத் ஒன்றியத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை வாலண்டினா ட்ரெஸ்கோவை வரைந்த ஓவியம் இவரை உலகம் அறியவைத்தது. இந்த புகழை அடுத்து இரும்பு பெண்மணியாகப் போற்றப்படும் இந்திரா காந்தியின் உருவப்படத்தை வரையும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
இதையடுத்து டெல்லியில் சுற்றுலாப் பயணிகளை வரைவதற்கான வாய்ப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியான ஒரு நாளில்தான் 1975ம் ஆண்டு இவர் ஸ்வீடன் நாட்டிலிருந்து படிப்பிற்காக வந்த சார்லோட் வான் ஷெட் என்ற பெண்ணை சந்திக்கிறார். அவரை அழகாக ஓவியம் தீட்டி பரிசாகக் கொடுக்கிறார் பிரத்யும்ன குமார்.
பின்னர் இவர்கள் நண்பர்களாகப் பழகி காதலர்கள் ஆனார்கள். இதையடுத்து ஒடிசாவில் தனது குடும்ப வழக்கப்படி சார்லோட் வான் ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் சார்லோட் வான் ஷெட். இவர்கள் இருவரும் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து சார்லோட் தனது கல்வியை முடித்து விட்டு ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுவிட்டார். இவரும் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். இருப்பினும் இவர்கள் ஒரு வருடாக கடிதங்கள் மூலம் பேசி வந்தனர்.
இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க நாம் ஏன் ஸ்வீடனுக்கே செல்லக் கூடாது என பிரத்யும்ன குமாருக்குத் தோன்றியது தான் தாமதம். உடனே அதற்கான வழிகளைத் தேடியுள்ளார். விமானத்தில் செல்லும் அவருக்கு வசதி இல்லாததால் எப்படி ஸ்வீடன் செல்வது என தொடர்ந்து யோசித்து வந்துள்ளார்.
பிறகு ஒருவழியாகச் சைக்கிளில் பயணம் செய்வது என்று முடிவு செய்துள்ளார். உடனே தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று விட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஸ்வீடன் நோக்கி சைக்கிளை மிதித்துள்ளார்.
இப்படியாக இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி மற்றும் ஐரோப்பா நாடுகள் வழியாக ஸ்வீடன் வந்து சேர்ந்துள்ளார். இங்கு வந்து சேர இவருக்கு நான்கு மாதங்கள் ஆகியுள்ளது. தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு காதல் கணவன் வந்ததைக் கண்டு சார்லோட் வான் ஷெட் உற்சாகம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இந்த தம்பதிகள் சேர்ந்து உற்சாகமாக தங்களது இல்வாழ்க்கையை 44 ஆண்டுகள் கடந்தும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது பிரத்யும்ன குமார் ஸ்வீடன் நாட்டு அரசாங்கத்தின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஆலோசகராக உள்ளார். பிரத்யும்ன குமாரின் இந்த காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!