Viral

15 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 32 லட்சத்திற்கு ஏலம் போன உலகின் முதல் iPhone.. அப்படி என்ன ஸ்பெஷல் அதில்?

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. கொரோனா வந்த பிறகு ஊரடங்கு காரணமா பள்ளி மாணவர்கள் கைகளுக்கும் ஸ்மார்ட் போன் சென்று விட்டது. போனால் நல்லது கெட்டது என இரண்டும் இருந்தாலும் இனி நம்மிடம் இருந்து பிறக்க முடியாது ஒன்றாக ஸ்மார்ட் போன் மாறிவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு போன், ஐ போன் என இரண்டு வகையான போன்களின் ஆதிக்கம் தான் உலகம் முழுவதும் உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தான் விலை உயர்ந்தவையாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்கள் ரூ. 10 ஆயிரத்திற்கே அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் ஐ போன்கள் அப்படி இல்லை. அதன் துவக்க விலையே ரூ. 30 ஆயிரம் இருக்கும்.

இந்நிலையில் உலகில் முதலில் அறிமுகமான முதல் ஐ போன் ரூ. 32 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக ஐ போனை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த ஐ போன் 3.5 இன் டிஸ்பிளேவுடன் சிறியதாக இருந்தது. இதனால் பலரும் இந்த ஐ போனை கிண்டல் அடித்தனர். ஆனால் கிண்டல் செய்யப்பட்ட இந்த ஐ போன் தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 32 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் ஐ போன் 3.5 இன் டிஸ்பிளே, 3 ஜி சேவையைக் கொண்டது. மேலும் 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் சஃபாரி வெப் புரேவுசர் உடையது. மேலும் 4.8 இன்ச் அகலமும், 4.5 அங்குல உயரமும் கொண்டது முதல் ஐ போன். இது 133 கிராம் எடை உடையது.

இந்த 15 ஆண்டுகளில் முதல் ஐ போனில் இருந்து தற்போது வரை 38 வகையான ஐ போன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 14 சீரிஸ் ப்ரோ மாடல்தான் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

இந்நிலையில்தான் முதல் ஐ போனை அமெரிக்காவைச் சேர்ந்த ஆர் ஆர் என்ற நிறுவனம் ஏலம் அறிவித்தது. இந்த ஏலம் வெளியான சில மணி நேரத்திலேயே ரூ. 32 லட்சத்திற்கு ஒருவர் முதல் ஐ போனை ஏலம் எடுத்துள்ளார்.

Also Read: “தமிழ் சினிமாவின் காட் பாதர்..” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!