Viral
"என் காருலயே சாய்றியா..?" -6 வயது தெருவோர சிறுவனை எட்டி உதைத்த காரின் உரிமையாளர்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரளாவில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை, அந்த காரின் உரிமையாளர் எட்டி உதைக்கும் வீடியோ வைரலானதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் தலசேரி பகுதியில் நேற்று மாலை நேரத்தில் சாலையில் ஓரத்தில் கார் ஒன்றை நிறுத்திவைத்துவிட்டு அதன் உரிமையாளர் எங்கயோ சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த தெருவோர சிறுவன் ஒருவர், அந்த காரில் சாய்ந்து நின்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பிய காரின் உரிமையாளர், சிறுவன் தனது காரில் சாய்ந்திருப்பதை கண்டுள்ளார். அப்போது காரின் உரிமையாளர் சிறுவனை தள்ளிப்போக கூறாமல், 'சாய்ந்து நிற்க வேறு இடமில்லையா' என்று கூறி எட்டி உதைத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவன் கண்கலங்க காரை விட்டு தள்ளி நின்றார். சிறுவனை காரின் உரிமையாளர் எட்டி உதைப்பதை கண்ட பொதுமக்கள், உடனே அவரிடம் வந்து கேட்டுள்ளனர். மேலும் அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர் .
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் கார் உரிமையாளர் சிறுவன் என்றும் பாராமல் அவரை எட்டி உதைப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் இது குறித்து பொது தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் காரின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தனர். சிறுவனை பொதுவெளியில் தாக்கிய வழக்கில் காரின் உரிமையாளர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த காரின் உரிமையாளர் பெயர் ஷிஷாத் என்பதும், அவர் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் தாக்கப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியின் 6 வயது மகன் கணேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!