Viral
"நாம் அமைதியாக வாழக் காரணம் பெரியார், அம்பேத்கர்"- வர்ணாசிரமத்துக்கு எதிராக 6-ம் வகுப்பு மாணவியின் பதில்!
இந்தியாவில் பல ஆண்டுகளாக தீண்டாமை கொடுமை இருந்துவருகிறது. அதன் உச்சமாக வர்ணாசிரமம் இருந்து வருகிறது. பிறப்பை வைத்து மனிதரை பிரிக்கும் வர்ணாசிரம கொள்கை சாதியின் ஆணிவேராக பல ஆண்டுகள் திகழ்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்துத்துவவாதிகள் வர்ணாசிரம கொள்கையை ஆதரித்து வருகின்றனர்.
அதன் உச்சகட்டமாக அது பாடத்திட்டத்தில் இருந்துவருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அது இருந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு தமிழக மாணவி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பரவும் அந்த புகைப்படத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் தமிழக சிறுமி ஒருவர் வர்ணாசிரமம் குறித்த கேள்விக்கு பாடத்தில் இருப்பதை போல பதிலளித்து அதில் இறுதியாக பெரியாரும் அம்பேத்கரும் இந்த சாதிய முறைக்கு எதிராக போராடினர் என்றும், இந்த வர்ணாசிரமத்தை போதிக்கும் மனுஷ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு தலைவர்களால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும், இந்தியா வேற்றுமையில் ஒருமையாக இருக்க காரணம் இவர்கள்தான் என்றும் கூறியுள்ளார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மாணவியின் இந்த பதிலுக்கு அதை திருத்திய ஆசிரியர் GOOD என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் என்னதான் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம், சனாதனத்தை திணித்தாலும் உண்மையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழும் மண் இது என்பதும், பெரியாரின் சமூகநீதி கருத்துக்களால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு என்பதும் இந்த மாணவியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!