Viral
கண்ணூர் TO கத்தார்.. Football உலகக் கோப்பையை காண தனியாக காரில் பயணம் செய்யும் 5 குழந்தைகளின் தாய்!
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அடுத்து கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாகக் கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் அதிகமான கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளனர். எங்கு கால்பந்து தொடர்கள் நடந்தாலும் இம்மாநில ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எல்லையே இருக்காது. அந்த அளவிற்குக் கால்பந்து ஆட்டத்தைக் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் கால்பந்து உலகின் மிக பெரிய தொடரான ஃபிபா உலகக் கோப்பை நவம்பர் 20ம் தேதி கத்தாரில் தொடங்க உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் இப்போதே போட்டியை நேரில் காண தங்களின் பயணத் திட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனி ஒருவராக 'மஹிந்திரா தார்' கார் வாகனத்தில் கத்தார் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 5 குழந்தைகளுக்குத் தாயான இவர் கால்பந்து போட்டிகளை நேரில் காண்பதற்காக இந்த பயணத்தை தொடங்கியது பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை இவர் இந்த பயணம் மூலம் உணர்த்தியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாஜி நௌஷி. இவரது கணவர் நௌஷாட். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளன. கால்பந்து விளையாட்டு மீது அதிக காதல் கொண்ட இவர் ஃபிபா உலகக் கோப்பையை நேரில் பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது பயணத்திற்கும் பச்சைகொடிகாட்டிவிட்டார். இதையடுத்து 'மஹிந்திரா தார்' கார் வாகனத்தை எடுத்துக் கொண்டு கத்தார் நோக்கி நாஜி நௌஷி பயணம் செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் இந்த பயணத்தை அவர் குடும்பத்துடன் சேர்ந்து அப்பகுதி மக்களும் கொண்டாடி அவரை வழி அனுப்பிவைத்துள்ளனர். மேலும் அம்மாநில அமைச்சர் ஆண்டனி ராஜூ, நாஜி நௌஷி-யின் கத்தார் பயணத்தை கொடியசைத்து தொடங்கை வைத்துள்ளார். கண்ணூரில் தொடங்கிய அவரது பயணம் முதலில் மும்பை சென்று அங்கிருந்து கப்பலில் ஓமனுக் சென்று, பிறகு மீண்டும் காரில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக, கத்தார் சென்றடையத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி பலரும் நாஜி நௌஷி-யின் கத்தார் பயணத்திற்கு வாழ்த்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!