Viral
கடை வெளியே TV பார்த்துகொண்டிருந்த தெருவோரக் குழந்தைகள்.. கார்டூன் படத்தை போட்டு காட்டிய கடை ஊழியர்!
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘காக்கா முட்டை’. இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதாரணமான ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பீட்சா கடையில் சாப்பிட ஆசைப்படுவர். ஆனால் அவர்களை அந்த கடையின் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் இங்கே ஒருவர் ஏழை குழந்தைகள் வெளியே நின்று டி.வி பார்ப்பதை கண்ட ஊழியர் ஒருவர் அவர்களுக்கு கார்டூன் படத்தை போட்டுக்காட்டியுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புதிதாக ‘டார்லிங்’ என்ற எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் கண்ணாடி குடுவையில் அடைக்கப்பட்டிருந்த LED TV-யில் சில காட்சிகள் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் ஏழை குழந்தைகள் இரண்டு பேர் கடையின் வெளியே அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த குழந்தைகளை அங்கிருந்து விரட்டமால் அவர்களுக்கு பார்க்க அனுமதி கொடுத்தார். அவர்களும் பார்த்துகொண்டிருந்தனர்.
பின்னர், அந்த ஊழியர் உள்ளே இருந்து வெளியே வந்து குழந்தைகளை கவரும் விதமான கார்டூன் படங்களை போட்டுக்காட்டினார். அதாவது அந்த டி.வி-யில் யூடியூப் கனெக்ட் செய்து குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக பொம்மை படத்தை போட்டுக்காட்டினார். அப்போது அதில் இருந்த ஒரு சிறுமி ‘இந்த படம் வேண்டும்’ என்று கை காட்ட, அந்த ஊழியரும் சிறுமி கேட்ட அந்த பொம்மை படத்தை போட்டுக்காட்டினார். குழந்தைகளும் அதனை மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.
பொதுவாக இது போன்ற ஷோ ரூம் கடைகளில் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவர்களை துரத்தி அடிப்பது உண்டு. ஆனால் இங்கு அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியரே அந்த குழந்தைகளுக்கு பிடித்தவற்றை போட்டுக்காட்டி மகிழ்வித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஊழியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றன.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்