Viral
மீண்டும் இணையத்தில் வைரலாகும் #StopHindiImposition: கம்பீரமாக ஒலித்த தமிழ்நாட்டின் குரல்: பீதியில் BJP!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அணைத்து மாநிலங்களிலும் இந்தியை எப்படியாவது திணித்து விட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க -வின் இந்த மொழி திணிப்புக்குத் தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எப்போது எல்லாம் பா.ஜ.க இந்தித் திணிப்பை கையில் எடுக்கிறதோ எப்போது எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் துணிச்சலுடன் 'இந்தி தெரியாது போடா' என சத்தமாக முழக்கமிட்டு வருகிறார். அப்போது எல்லாம் தமிழ்நாட்டின் இந்த குரல் தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் 'இந்தி தெரியாது போடா' என்ற குரல் சத்தமாக ஒலித்து வருகிறது. பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டு மக்கள் எந்த வகையிலும் உங்கள் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டார்கள். மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றால் டெல்லி சென்று போராட்டம் நடத்துவோம். நாங்கள் எப்போதும் சொல்லும் வார்த்தை "இந்தி தெரியாது போடா" என தெரிவித்தார். இந்நிலையில் ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
Also Read
-
பதவி விலகும் முன் ஜோ பைடன் வழங்கிய உத்தரவு: கொதித்தெழுந்த ரஷ்யா... அணு ஆயுத கொள்கையை மாற்றியதால் அச்சம் !
-
”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
-
யார் உங்களுக்கு ரூ.5 கோடி பணம் அனுப்பியது? : பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
-
"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!