Viral
எருமை ஏன் அங்கே வந்தது? : உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு - வந்தே பாரத் ரயில் விவாகரத்தில் நடவடிக்கை!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தார்.
புதிதாகப் பரிசோதனை செய்யப்பட்ட 3-வது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டது.
மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது நேற்று காலை 11.15 மணியளவில் மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலானது.
இதையடுத்து இது தான் மோடியின் மேக் இன் இந்தியா திட்டமா என இணைய வாசிகள் பலரும் விமரிசத்து தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் மீது மோதி சேதம் ஏற்படுத்திய விவகாரத்தில் எருமை மாடுகளில் உரிமையாளர்கள் மீது குஜராத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த எருமை மாடுகளின் உரிமையாளர்களை போலிஸார் இதுவரை கண்டறிய முடியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலிஸார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!