Viral

வங்கிகளுக்கு அக்டோபர் 21 நாட்கள் விடுமுறை : whatsapp மூலம் பரவும் செய்தி.. உண்மை என்ன ?

அக்டோபர் மாத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீப ஒளித்திருநாள் என பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருக்கிறது. இதனால் விடுமுறைகள் அதிகம் உள்ளமாதமும் இந்த மாதம்தான். இந்நிலையில் வங்கிகளுக்கு அக்டோபர் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்து ஒன்று பரவி வருகிறது. மேலும் இந்த செய்தியை நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என தவறான தகவல் பரவி வருகிறதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். இது குறித்துக் கூறிய வங்கி அதிகாரிகள், "வங்கிகள் விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாத்தில் 4ம் தேதி சரஸ்வதி பூஜை, 5ம் தேதி விஜயதசமி, 24ம் தேதி தீப ஒளித்திருநாள் என 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. மேலும் 2வது, 4வது சனிக்கிழமை வழங்கம்போல் வங்கிகளுக்கு விடுமுறை. இம்மாதம் 10 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. இதில் பொது விடுமுறை என்பது 3 நாட்கள்தான். எனவே சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது" என தெரிவித்துள்ளார்.

Also Read: "இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது": ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!