Viral

‘விவாகரத்து’ பெறுவது சரியா ? : நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் : சமூகம் எப்படி அணுகுகிறது ?

நம் சமூகத்தில் விவாகரத்து எப்படி அணுகப்படுகிறது?

விவாகரத்து என்பது பெரும் பிரச்சினைதான். நம் சமூகம் விவாகரத்தை புரியாத சமூகம். ஆண்கள் கூட male privilege கொண்டு தைரியமாக வெளியில் சொல்லி, இரக்கம் தேடி என ஏதேனும் பிழைப்பு ஓட்டிவிட முடிகிறது. பெண்களுக்கு ரொம்பவே சிரமம்தான்.

நம் சமூகம் பிரிவை ஏற்காத சமூகம். இன்னும் சொல்லப்போனால் பிரிவை நாகரிகமாக அணுகாத சமூகம். சம்பந்தப்பட்ட ஜோடி ஒரு பிரிவை எப்படி கையாளுகிறார்கள் என்பதிலேயே அவர்கள் ஒன்றாய் இருந்தபோது என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என தெரிந்துவிடும்.

பிரிகையில் மற்றவரை பற்றி அவதூறு பேசுவது, காயப்படுத்துவது, ஒடுக்குவது, தனக்கென ஆட்கள் சேர்த்துக் கொண்டு கட்சி கட்டுவது என ஒரு சாராரும் இன்னொரு பக்கம் பிரிவை அனுமதிக்க மாட்டேன் என வன்மத்துடன் தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் வெற்று அகங்காரத்துடன் அலையும் சாராரையும் நாம் அனைவரும் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஒருவரின் உறவு என்ன லட்சணத்தில் இருந்தது என்பது பிரிவை அவர் எப்படி அணுகுகிறார் என்பதிலேயே தெரிந்துவிடும்.

விவாகரத்து பெற்றுவிட்டால் உங்களுக்கு முன் யார் கையும் படாத வாழ்க்கை ஒன்று காத்திருக்கிறது. அங்கு முழுக்க முழுக்க நீங்கள்தான் ஆதாம், நீங்கள்தான் ஏவாள், நீங்கள்தான் சாத்தான், நீங்கள்தான் கடவுள்!

பெண்ணின் வாழ்க்கையில் அவள் எப்படி வாழ வேண்டும் என அவளல்லாத பலர் முடிவெடுப்பார்கள். அவள் போக வேண்டிய வாகனத்தை பலர் ஓட்டுவார்கள். இப்போது முதன்முறையாக wheel உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. கேட்பார் யாரும் இல்லை. சொல்வார் நிறைய இருப்பார்கள். பொருட்படுத்தாதீர்கள். வாகனத்தை உங்கள் விருப்பத்துக்கு ஓட்டுங்கள். விரும்பும் இடத்துக்கு செல்லுங்கள்.

விவாகரத்து பெறும் process-ல் இருந்தால் மன அழுத்தம் அதிகம் ஏற்படும். அந்த ப்ராசஸ் குறைந்தது ஒரு மூன்று வருட நீள மாத்திரை. திருமணம் நம் வாழ்க்கையை நாசமாக்கினால், நீதி அதன் பங்குக்கு கொஞ்சம் நாசமாக்கும். ஆனால் அதையும் அகம் கொண்டு சரியாக்கிக் கொள்ளலாம்.

விவாகரத்து பெறும் process-ஐ வீட்டருகே இருக்கும் சாக்கடை என புரிந்து கொள்ளுங்கள். இப்போது யோசியுங்கள், சாக்கடை நாற்றத்தினால் வீட்டுக்குள் நுழையாமல் அதன் அருகேயே உட்கார்ந்திருக்க போகிறீர்களா அல்லது அதை வீட்டுக்குள் போகும்போதும் வெளியேறும்போதும் மட்டும் அதை தாண்டி உங்கள் விருப்ப வாழ்க்கையை வாழப் போகிறீர்களா?

விவாகரத்து என்பது ஒரு பெரிய வாய்ப்பு. மிகப்பெரிய சிறகு. ஆசிய நாடுகளின் சமூகம் விவாகரத்தை சுலபமாக ஏற்காது என்பது உண்மைதான் என்றாலும் அதை நாம்தான் மாற்ற வேண்டும். இதற்கென யாரும் வானத்தில் இருந்து குதித்து எல்லாம் வரப்போவதில்லை. நாம்தான் அங்கீகரிக்கத் தொடங்க வேண்டும்.

நிற்க.. இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு சற்று முன்பு ஊடங்களில் ஒரு செய்தி ஒன்று வெளியானது. நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக அந்த செய்தியில் தகவல் சொல்லப்பட்டது. நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மிகப் பெரிய திரைபிரலங்கள். அவர் பார்க்கும் பார்வையை வைத்தே பல வகையான செய்தியை திரித்து சொல்லும் ஊடங்கள் நிறைந்து கிடைக்கின்றனர்.

அப்படிதான் ஊடங்கள் சமீபத்தில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியை ஊதி பெரியாதிக்கியது. இரண்டு பேரும் முழு சம்மதத்துடன் எடுத்த முடிவை ஊடங்கள் நீதிமன்றங்களாக மாறி, தவறான முடிவு என போலி தீர்ப்பை வழங்கியது. நாம் மேல குறிப்பிட்டுள்ளது போல விவகாரத்தை சரியாக புரிந்துக்கொண்டவர்கள் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா.

பிரிந்து செல்வது என்ற முடிவை துணிச்சலாக அறிவித்தனர். ஒருவரைப் பற்றி ஒருவர் அவதூறு பேசுவது, காயப்படுத்துவது, ஒடுக்குவது, தனக்கென ஆட்கள் சேர்த்துக் கொண்டு கட்சி கட்டுவது என எந்த செயலையும் செய்யாதீருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் விவகாரத்து அறிவித்த பின்னரும் மகனின் பள்ளி நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்துக்கொண்டனர்.

இந்தநிலையில், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவையும் வரவேற்போம். வாழ்த்துக்கள் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா.

Also Read: 90S KIDS-களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மர்ம தேசம், ஜீ பூம்பா தொடரின் நடிகர் தற்கொலை!