Viral
3 அடி உடும்பை விழுங்கி ஜீரணமாகாமல் கக்கிய நாகப்பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் ஒரு பெரிய நாகப் பாம்பு ஒன்று அந்தப் பகுதியை சுற்றி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, நாகப் பாம்பு ஏதோ ஒன்றை விழுங்கி ஜீரணமாகாமல் தவித்து வந்தது தெரிந்தது . இதனை அடுத்து வனத்துறையினர் மசினகுடி பகுதியில் பாம்பு பிடிப்பளரான ஸ்நேக் முரளி என்பவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து அங்க சென்று பார்க்கும் போது விழுங்கியதை அந்தப் பாம்பு மெல்ல மெல்ல கக்க வெளியே கக்கியது. அப்போதுன் பாம்பு விழுங்கியது 3 அடி நீளம் கொண்ட உடும்பு என்பது வனத்துறைக்கு தெரியவந்தது.
பின்னர், பாம்பை பிடித்த ஸ்நேக் முரளி அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அதை விட்டனர். இது பற்றி பாம்பு பிடிப்பாளர் கூறும் போது, நாகப்பாம்பு இதுவரை நான் கண்டதில் 6 முதல் 7 அடி வரை மட்டுமே இருந்தது. ஆனால் இந்த பாம்பு 9 அடிக்கு மேல் இருந்தது.
உடும்பு போன்ற உயிரினங்களை அவ்வளவு எளிதில் பாம்பு பிடிக்க முடியாது. ஆனால் இந்த பாம்பு ஒரு உடும்பையே விழுங்கியது ஆச்சரியமாக இருந்தது" என தெரிவித்தார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்