Viral
ஆர்டர் செய்ததோ Drone Camera.. வந்ததோ பொம்மை கார்: வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த Flipkart!
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ஃப்ளிப்கார்ட் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவுக்கு பதில் பொம்மை கார் பார்சலில் இருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன். இவரது நண்பர் சுரேஷ். இவருக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டுள்ளது. இதனால் மொய்தீன் ஃப்ளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பார்சல் வந்துள்ளது. பின்னர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ட்ரோன் கேமராவுக்கு பதில் விளையாட்டு பொம்மை கார் இருந்தை கண்டு மொய்தீன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு மொய்தீன் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான தவறுகளை எப்போதுதான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சரி செய்யுமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!