Viral
திருடனை 10 கி.மீ ரயிலின் வெளியே தொங்கவிட்ட பயணிகள்.. உயிர்பயத்தில் கதறியபடி வந்த திருடனின் வீடியோ வைரல் !
பீகார் மாநிலம் பெகுசராரி எனும் நகரில் இருந்து காகாரியா என்ற நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த ரயில் சஹேப்புர் கமல் என்ற ரயில் நிலையத்தில் நின்று பின்னர் கிளம்ப தொடங்கியுள்ளது.
அப்போது அதில் பயணித்த பயணி ஒருவரின் செல்போனை பிளாட்பார்மில் நின்ற ஒரு திருடன் ஒருவன் ஜன்னலுக்குள் கை விட்டு திருட முயன்றுள்ளார். இதில் உடனே உஷாரான அந்த நபர் செல்போனை எடுக்கவந்த கையை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட திருடன் கையை எடுக்க முயன்ற நிலையில், பயணி திருடனின் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். ரயில் வேகமாக நகர நகர திருடனின் கையை விடாமல் பயணி கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.
இதனால் பிளாட்பாரத்தில் ரயில் வேகமாக சென்ற நிலையில் திருடனின் வேறு வழியின்றி வேகமாக ஓடியுள்ளார். ஆனால் பிளாட்பாரம் முடிந்த பின்னரும் திருடனின் கையை அந்த பயணி விடவில்லை. இதனால் ரயில் ஜன்னலில் கையை வைத்தபடி ரயிலுக்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி அந்த பயணி வந்துள்ளார்.
இதனால் மற்றொரு கையை அந்த திருடன் ஜன்னலில் பிடிக்க ரயிலில் இருந்த இதரப்பயணிகள் அவரின் மற்றொரு கையை பிடித்துக்கொண்டனர். திருடன் வழியெங்கும் மன்னித்துவிடுங்கள்.. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியபடி அந்த திருடன் வந்துள்ளார்.
ஒரு பக்கம் கையில் உயிர்போகும் வலி , உயிர் பயம் ஒருபக்கம் என அஞ்சி அலறிய திருடன்வழியெங்கும் கத்திகொண்டே வந்துள்ளார். சுமார் 10 கிலோமீட்டர் ரயிலின் வெளியே தொங்கியபடி வந்த அந்த திருடனை அடுத்த ரயில்நிலையம் வந்தபின்னர் பயணிகள் கையை எடுத்துள்ளனர். விட்டதும் ஒரே ஊட்டமாக ஓடிய அந்த திருடன் அங்கிருந்து மறைந்துள்ளார்.
இந்த நிலையில்,ரயிலுக்கு வெளியே திருடன் தொங்கியபடி வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைக் கண்ட பலரும் திருடனுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று கருத்து கூறி வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்