Viral
ZOMATO ஊழியரை நடு ரோட்டில் வைத்து காலனியால் தாக்கிய பெண்.. VIRAL VIDEO-வின் பின்னணி என்ன?
தற்போதுள்ள நவீன உலகத்தில் பலரும் தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் இருந்தே மொபைல் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றனர். அதில் உணவு என்பது பிரதமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான உணவுகளை ZOMATO, SWIGGY உள்ளிட்டவற்றில் ஆர்டர் செய்கின்றனர்.
இந்த ஆர்டரையும் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்கின்றனர். அதோடு இதில் வேலை செய்யும் ஊழியர்கள் வெயில், மழை, குளிர் என்று பாராமல் உழைக்கும் ஊழியர்களை பயனர்கள் பலரும் மதிப்பதே இல்லை. மேலும் பயனர்களுக்கு வீட்டில் வேறு ஒரு பிரச்னை என்றாலும், அதனை இவர்களிடம் காட்டிவரும் சம்பவங்கள் சில நேரங்களில் நடந்து வறுகின்றன. அதே போன்றொரு சம்பவம் தான் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ZOMATO ஊழியர் ஒருவர் பெண் வாடிக்கையாளர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோவை “Bogas 04” என்ற ட்விட்டர்வாசி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ZOMATO ஊழியர் ஒருவரை, பெண் வாடிக்கையாளர் ஒருவர் இரவு நேரத்தில் நடு ரோட்டில் வைத்து கண்டபடி திட்டுகிறார். அவரை திட்டியதோடு தனது ஷூவையும் கழற்றி அவரை அடிக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட அந்த பயனர், இது குறித்து கருத்தும் பதிவிட்டுள்ளார்.
அதில், ஆர்டரை டெலிவரி செய்ய வந்த அந்த சோமேட்டோ ஊழியரிடம் இருந்து, (#4267443050) ஒரு பெண் தனது ஆர்டரை பெற்றுக் கொண்டு, அவரை செருப்பால் அடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரும் மறுபேச்சு பேசாமல், தனது வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில், அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "அந்த ஊழியருக்கு நான் உதவுவதற்காக, ZOMATO வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர்களால் சரிவர பதிலளிக்கவில்லை. 'உங்கள் பங்குதாரர் தாக்கப்பட்டார், தயவுசெய்து அவருக்கு உதவுங்கள்' என்று கூறிய போதும், அவர்கள் அதற்கு சரிவர பதில் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதுவரை அந்த பெண் யார்?, எதற்காக அந்த ஊழியரை தாக்கினார்? என்பது குறித்து விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை. இ வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு ஊழியரிடம் கடுமையாக நடந்துகொண்ட அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!