Viral
விழா மேடையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பழங்குடியின பெண்.. 50 ஆண்டுக்கு பின் மன்னிப்பு கேட்ட Oscar!
சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929ம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்தே ஒவ்வொரு ஆஸ்கர் விருது வழங்கும் போதும் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது கூடி, தனது மனைவியைக் கிண்டல் செய்த, தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் அறைந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த சம்பவத்திற்காக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். இப்படி ஒவ்வொரு ஆஸ்கர் விருது வழங்கும்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து வருகிறது.
அப்படி 1973ம் ஆண்டு நடந்த சர்ச்சை சம்பவத்திற்காக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கர்குழு மன்னிப்பு கோரியுள்ளது பலரை மீண்டும் அந்த நிகழ்வைப் பேசவைத்துள்ளது. அந்த சம்பவம் என்ன என்பதை இங்குப் பார்ப்போம்.
1973ம் ஆண்டு 45வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் 'தி காட்பாதர்' படத்துக்குச் சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என 3 விருதுகள் கிடைத்தன. இந்த படத்தில் சிறப்பாக நடித்த மார்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விழாவில் நடிகர் மார்லான் பிராண்டோ பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் அமெரிக்க பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த பெண் காஷீன் லிட்டில்ஃபெதர் விருது வாங்க மேடைக்கு வந்தார். அப்போது , திரைத்துறையில் அமெரிக்க பூர்விக் குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதால் விருதை வாங்க மறுப்பதாக மார்லன் பிராண்டோ எழுதிய கடிதத்தை வாசித்து விட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.
இதையடுத்து அங்கிருந்த பலரும் அந்த பெண் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். அவருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் நடந்த போது சாஷீன் லிட்டில்ஃபெதருக்கு 26 வயது. தற்போது அவருக்கு 75 வயதாகுகிறது.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு சாஷீன் லிட்டில்ஃபெதருக்கு மன்னிப்பு கோரி ஆஸ்கர் குழு கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளது. இதில், திரைத்துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுக்காலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!