Viral
வாசிப்பு ஏன் ஒருவருக்கு பரவசத்தை கொடுக்கிறது?.. புத்தகங்களில் அப்படி என்னதான் இருக்கும்?
வாசிப்பை பொறுத்தவரை எழுதியவர் சொல்வது பாதி என்றால் நீங்கள் சொல்வது மீதியாக இருக்கும். வாசிப்பவரையும் எழுத்து பங்கு கொள்ள செய்யும். 'ஒரு காடு' என்ற இரு வார்த்தைகளை படித்தால் போதும். வானம் மறைக்கும் மரங்கள் சூழ்ந்து, சில்வண்டுகள், பறவைகள் சத்தத்துடன் எங்கோ ஓடும் ஒரு காட்டாற்றின் சத்தத்தம் நிறைந்த ஒரு புழுக்கமான காட்டை கற்பனை செய்து விடுவீர்கள். இரண்டு வார்த்தைகள் படைக்கப்பட்டதில் நீங்கள் மனவெளியில் ஒரு காட்டை படைத்திருப்பீர்கள்.
'அவள் இல்லாதது அவன் தொண்டையை அடைத்தது' என படித்தால் உங்கள் தொண்டை அடைக்கும். கதையில் வரும் மாந்தரின் உணர்வை நீங்கள் கொள்வீர்கள். Empathize செய்வீர்கள். மனவெளி பரந்துபடவும் அடுத்தவர் உணர்வை உங்கள் உணர்வாக புரிந்துகொள்ளவும் ஒரே நேரத்தில் சாத்தியத்தை கொடுப்பது வாசிப்புதான்.
கலைவடிவத்தை துய்ப்பவனையும் தன்னுள் பங்குபெற வைக்கும் படைப்பே சிறந்த படைப்பாக இருக்க முடியும்.
எழுத்து என்ற மொத்த வடிவமே படிப்பவனை தன்னுள் பங்கு பெற வைக்கும் வடிவம் என்பதுதான் அதன் அழகும். சுவாரஸ்யமும். அதனால்தான் வாசிப்பு, பரவசம்!
புதிதாய் படிப்பவர்களிடம் பெரும்பாலும் இந்த creativity and empathy எல்லாம் பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் கட்டாயத்தின் பேரில் படிப்பதால் இருக்கலாம். அல்லது தூக்கம் வர படிப்பவர்களாக இருக்கலாம். வாசிப்பு உள்ள பலர் empathize செய்யாமல் self centred ஆக செயல்படுவதற்கான காரணமாகவும் இதையே சொல்லலாம்.
சிறுவயதில் இருந்து வாசிப்பு தொடங்குகையில் புது மனம் வார்க்கப்படுவதும் வாசிப்பு வளர்வதும் ஒருங்கே நடக்கும். வாசிப்பின் வழியே போதிக்கப்படும் பண்புகள் யாவும் அந்த வயதில் மிக எளிதாக மனதில் தங்கும். தாமதமாக படிக்க தொடங்குபவர்களுக்கு அந்த சாத்தியம் சற்று குறைவு. ஏனெனில் அவர்களது மனம் ஏற்கனவே உருவாகி இருக்கும். உலகப்பிரகார பண்புகள் என சிலவற்றை அவர்கள் உருவாக்கி முடித்திருப்பார்கள். ஆதலால் வாசிப்பு அவர்களின் ஏற்கனவே உருவான பண்புகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. அந்த பண்புகள் அதற்கு முன்னமே ஆழமாக அகங்காரத்துடன் கட்டிப்போடப் பட்டிருக்கும்.
சிறுவயதில் இருந்தே வாசிப்பவர்கள் பதின்வயதில் சற்று தடுமாற்றம் அடைவதற்கு காரணமும் இதுதான். அவர்கள் படித்த நற்பண்புகள் எதுவும் இல்லாத உலகம் அவர்களை வரவேற்கும். கிண்டல் செய்யும். பதறுவார்கள். உலகம் எதிர்பார்க்கும் பிழைப்புவாத பண்புகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை மிக சுலபமாக எள்ளி நகையாடுவார்கள். ஆனாலும் மெல்ல மெல்ல பதின்வயது முற்றும் நேரத்தில் உலகுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்வார்கள். அதை தன் அடையாளம் தொலையாமல் சரியாக கையாளவும் கற்றுக்கொள்வார்கள்.
வாசிப்பை வீண் என உதறித்தள்ளி உலகப்பிரகார சுயநல பண்புகளுடன் வளர்ந்து வெற்றிகள் குவிப்போரும் ஒரு கட்டத்தில் தொய்ந்து வீண் ஆவதை பார்க்கிறோம். ஆனால் சிறுவயதில் இருந்து வாசித்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தொய்ந்து போகாமல் going steady என வாழ்வதையும் பார்த்திருக்கிறோம்.
உலகப்பிரகார பண்புகளோடு வளர்பவர்களையும் உலகம் விட்டு வைப்பதில்லை. புரட்டி போடும். அதன் தன்மையே அதுதான். இவ்வுலகுக்கு இதுதான் சரி என நினைத்து வளர்ந்து வந்தவர்கள், தங்களையும் இவ்வுலகம் விரட்டுவதை பார்த்து அதிர்ந்து போகிறார்கள். செய்வதறியாது நின்று விடுகிறார்கள். ஆனால் வாசித்து வளர்ந்தவன், இவ்வுலகின் in and out-டை அறிந்து தன்னை தகவமைத்து கொண்டவன். இவ்வுலகின் மிக மோசமும் அவனை அதிர்ச்சியாக்குவதில்லை. மிகுந்த சந்தோஷமும் நிறைவை கொடுப்பதில்லை.
அவன் வாழ்க்கை அவன் வரைந்தது மட்டுமே. அவனே ராஜா, அவனே மந்திரி. அவன் வாழ்க்கைக்கும் இவ்வுலகின் வாழ்க்கைக்கும் என்ன தேவை என அவனுக்கு தெரியும். அதை அவன் பாணியில் செய்து கொண்டுதானிருப்பான். அதுதான் அவன் வளர்த்துக்கொண்ட creativity மற்றும் empathy பண்புகளின் கொடை.
மோசமான விஷயங்களை படித்தால் என்ன ஆவது?
குறைந்தபட்சம் மோசமானவனாகவாவது ஆகலாமே. எத்தகையவனாகவும் இல்லாமல் இருப்பதற்கு, அப்படியாவது இருந்து அடிபட்டு சாகலாமே.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!