Viral
'காதல்'.. இன்றைய சமூகம் புரிந்து வைத்திருப்பதுதான் என்ன?
காதல் என்று ஒப்புக்கொண்ட பின்னும் குறைந்தபட்ச அன்பு, உருகுதல், அரவணைப்பு, காதல் அங்கீகரிப்பு எல்லாம் இல்லை எனில் என்ன செய்வது? அதைவிட வன்முறை இருக்க முடியுமா?காதலாக இன்றைய சமூகம் புரிந்து வைத்திருப்பதுதான் என்ன?
முதலாளித்துவ கார்ப்பரெட் சமூகம் இன்று முன் நிறுத்துவது உறவை அல்ல. உணர்வை அல்ல. பணத்தை. பொருளாதாரத்தை. முன்னேற்றத்தை. அதனால் இயல்பாகவே பெண்ணும் ஆணும் ambitious ஆக வளர்க்கப்படுகிறார்கள். வேலை, வளர்ச்சி என ஓடுகிறார்கள். அவைதான் முக்கியமென கற்றுக் கொடுக்கப்படுகிறது
மனிதர்கள், உறவு, சக மனிதர்களின் உணர்வுகள் இவை எதுவும் பெரிய பொருட்டு அல்ல என்ற நிலை உருவாக்கப்படுகிறது. அதை இன்றைய இளைஞர்கள் நம்பவும் செய்கிறார்கள். உண்மையிலேயே முதலாளித்துவ உற்பத்தி முறையின் tricky game இது என புரிய மறுக்கிறார்கள். ஏனெனில் முதலாளித்துவத்துக்கு நம் உறவு, நம் உணர்வு, நம் தனிமை எதுவுமே தேவை கிடையாது. லாபங்கள் மட்டும்தான் தேவை. அதற்கு தேவையானதை மட்டுமே அது போதிக்கும்.
இங்கு. உங்களுக்கான வாழ்க்கைமுறை என ஒன்று இங்கு இருக்கிறது. உங்களை ஓடி முன்னேற ஆசை காட்டும் வாழ்வு, அந்த முறையை அழிக்க சொல்கிறது. அதை அழிக்க முற்படுகையில் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் நடுவில் சிக்கிக் கொள்கிறீர்கள். உங்களை காயப்படுத்துவது மட்டுமன்றி உங்களை உண்மையாக நேசிப்பவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் பொருட்படுத்தாமல் அவமதிக்கிறீர்கள். காயப்படுத்துகிறீர்கள்.
At the end of the day, நீங்கள் எங்கு ஓடி பறந்தாலும் வீடு திரும்ப வேண்டும். அங்கு உங்களை அரவணைத்து கைகோர்த்திருக்க ஒரு உள்ளம் வேண்டும். அதுதான் சாதனை. அந்த சாதனை எந்த வேதனையையும் ஆறச்செய்யும். அந்த சாதனையை நிகழ்த்த வேண்டுமெனில் அந்த உள்ளங்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும். அவர் எப்படியெல்லாம் உங்களிடம் உள்ளம் உருக வேண்டுமென நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் நீங்களும் உருக வேண்டும்.
ஆண், பெண் பேதமின்றி இச்சிக்கல் இருக்கிறது. இருக்கும் சமூகத்தையும் நம் தேவையையும் inner longing-ஐயும் சீர்தூக்கி ஆராய வேண்டும். உதாசீனம், taking advantage, அவமதித்தல் எல்லாம் இன்றி நாமும் அன்பு வழங்குவோம்.
நமக்கு தேவையான லாபங்கள் அன்பில் மட்டுமே கிட்ட வேண்டும். மற்ற எதில் கிடைக்கும் லாபமும் வளர்ச்சியும் செயற்கையானவை மட்டுமே. ராக்கேட்டில் சென்று இறங்கி பார்க்கும் நிலாவை விட, ஒருவரின் தோளில் சாய்ந்து பார்க்கப்படும் நிலவே அழகானது!
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!