Viral

ஒரு காலில் நிற்க முடியவில்லையா? - நீங்கள் விரைவில் உயிரிழக்க வாய்ப்பு- வெளிவந்த அதிர்ச்சி ஆய்வு முடிவு!

டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தினர்.

இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு காலை மேலே தூக்குங்கள் என்றும், அதனை மற்றொரு காலின் கீழே, பின்பக்கத்தில் வைக்கும்படியம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், கைகள் இரண்டையும் இரு பக்கங்களில் தளர்வாக விடப்பட்டு, நேராக பார்க்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்டோருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் ஆய்வில் 5ல் ஒருவர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆய்வில் கலந்து கொண்ட 123 பேர் அடுத்த 10 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் இது சோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில், ஒரு கால் ஆதரவின்றி 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால், அவருக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மரணம் ஏற்பட கூடிய ஆபத்து 84 சதவீதம் உள்ளது என தெரியவந்தது.