Viral
கணவர்களே உஷார்.. “பொம்மையை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளம்பெண்” : காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல குக்கரை செய்து கொண்ட பெண், ரோபோவை திருமணம் செய்த ஆண் என சமீப காலமாக விசித்திர திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் இதே பாணியில் பெண் ஒருவர் பொம்மையைத் திருமணம் செய்து மேற்கூறிய எலைட் பிரிவில் இடம்பெற்றுள்ளார். பிரேசிலை சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (37) என்ற பெண் சரியான துணை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மேலும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தன்னோடு நடனமாட ஏற்ற துணை இல்லாமல் வருத்தத்தில் இருந்துள்ளார். மகளின் வருத்தத்தை அறிந்த அந்த பெண்ணின் தாய் தனது வீட்டில் இருந்த பழைய துணிகளை தைத்து பொம்மை ஒன்றை உருவாக்கி அதை தனது மகளிடம் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த பொம்மைக்கு மார்செலோ என்றும் பெயரிட்டுள்ளார். இதன் பின்னர் அந்த பொம்மையோடு அதிக நேரத்தை கழித்த அந்த பெண் அதனை விரும்பத் தொடங்கியுள்ளார். இதன் பின்னர் அந்த பொம்மையையே திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி சுமார் 250 பேர் முன்னிலையில் அந்த பொம்மையை அவர் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள ரோச்சா மோரேஸ், "இந்த பொம்மை என்னோடு வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது, என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும் என்பதால் இதை திருமணம் செய்தேன்" எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பொம்மையோடு ஹனிமூன் கொண்டாட வெளியூர் சென்ற அவர், ஒரு குழந்தையையும் தத்தெடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தையும் ஒரு பொம்மைதான்.
இந்த திருமணத்தை பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இது போன்ற விசித்திர திருமணங்களை பற்றி கூறியுள்ள மருத்துவர்கள் சிலர் இது போன்ற செயல்களை விளம்பரத்துக்காக செய்கிறார்கள். ஆனால், சிலர் பிறரை வெறுத்து தனக்கு ஆறுதல் கொடுக்கும் பொருள்களை திருமணம் செய்து கொள்கின்றனர் எனக் கூறியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!