Viral
விக்ரம் வெற்றியும்.. நெல்சன் மீதான கிண்டலும்.. : உதவி இயக்குநரின் நெகிழ்ச்சி பதிவு!
உலகம் முழுவதும் திரையரங்குகளில் வசூல் வேட்டையில் மூழ்கியுள்ளது நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’. இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன்தாஸ், காளிதாஸ் ஜெயராமன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளது.
இதனால் 'விக்ரம்' படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. இந்நிலையில் 'விக்ரம்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் கமலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாஸ் படமாக 'விக்ரம்' அமைத்துள்ளது.
இந்நிலையில் தான் 'விக்ரம்' படம் கமலுக்கு மீண்டும் தனது புகழைத் தேடிக் கொடுத்துள்ளது. இதனால் கமல் மிகுந்த உற்சாகத்திலிருந்து வருகிறார். இதையடுத்து படத்தின் இயக்குநர், நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட பலரையும் பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்.
மேலும் படம் வெளியான 4 நாட்களிலேயே 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பார்ப்பவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக உள்ளது 'விக்ரம். இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குநர் லோகேஷை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கமல். இதனை லைஃப் டைம் செட்டில்மென்ட் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் இன்று மற்றொரு செட்டில்மென்ட் செய்துள்ளார் கமல். இது என்னவென்றால், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குநர்களுக்கும் TVS Apache RTP 160 பைக்கையும் பரிசு கொடுத்துள்ளார் விக்ரம் கமல். இதையடுத்து கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் விக்ரமை கொண்டாடி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, ஒரு படத்திற்கு வரும் வெற்றி பாராட்டை தாண்டி, தோல்வியில் முடிந்திருக்கும் படத்தின் மீது, குறிப்பாக அதன் இயக்குநர் மீது சமீபத்தில் நடத்தப்பட்டும் கருத்து தாக்குதல் சினிமா துறை சார்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை தேடித் தரவில்லை. அதனால் பலரும் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். அதேவேளையில் நெல்சனுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் உதவி இயக்குநர் புஹாரி ராஜா-வின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உதவி இயக்குநர் புஹாரி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், “விக்ரம் படத்தை முன்வைத்து , இயக்குநர் நெல்சன் மீது நடத்தப்படும் இணைய தாக்குதல்கள் ,தனிப்பட்ட முறையில் நிறையவே மனரீதியாக ஒருவித பதட்டத்தை உண்டு பண்ணுகிறது.
நெல்சனின் தோல்வி சொல்ல வருகிற செய்தி ,ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் தோற்றுப்போய்விடாதீர்கள் என்பதாகத்தான் இருக்கிறது. ”தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி,failure is a process”என பள்ளிகளில் நாம் கற்றுணர்ந்த அடிப்படை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஓட்டப்பந்தயத்தில் ஒருத்தன் மட்டும் தான் ஜெயிக்க முடியும் ,அதுக்காக ஓடுகிற எல்லா வீரனும் திறமையற்றவர்க்ள் என சுருக்கிவிட பார்க்கிறது.
தோல்வி என்பது கிண்டலுக்கு உள்ளாகும் பட்சத்தில், எல்லாவற்றிற்குமான அளவுகோல் வெற்றி தான் என்றாகும் பட்சத்தில், எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழலை யார் உருவாக்குகிறார்கள்? பரீட்சைல ஃபெயிலாகிட்டா தற்கொலை பண்ணிக்கலாமா? காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ளலாமா? என எப்போதும் அறிவுரைகளை தூக்கிசுமக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.?
இது நெல்சனுக்காக மட்டுமல்ல, தவறவிட்ட வாய்ப்புகளுக்காக இன்னும் வருந்தி காத்திருக்கிற எல்லா நண்பர்களுக்காக்வும் மீண்டு வருவதற்கு துணை நிற்போம், தோல்விகளை ஏற்றுக்கொள்ள பழகுவோம்.. ஒரு வெற்றி எல்லா தோல்விகளையும் மறைத்துவிடும் ஆனால் ஒரு தோல்வி நிறைய பக்குவப்படுத்தும் success is a journey not a destination” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!