Viral
‘திவ்யா.P VS திவ்யா பாண்டே..’ UPSC தேர்ச்சியில் நடந்த குழப்பம் - மாணவிக்கு காத்திருத்த அதிர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யா பாண்டே (24). இவரது தந்தை ஜெகதீஷ் பிரசாத் பாண்டே, மத்திய நிலக்கரி சுரங்கத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி 2016-ல் ஓய்வு பெற்றவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, திவ்யா UPSC தேர்விற்கு எந்த வித கோச்சிங் சென்டர்க்கும் செல்லாமல், தனது சொந்த முயற்சியால் வெற்றி பெற வேண்டுமென்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இவரது முயற்சி பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் சமீபத்தில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வை எழுதினார்.
இந்த தேர்வின் முடிவுகள் வெளியான போது, திவ்யாவின் மூத்த சகோதரியான பிரியதர்ஷினி பாண்டேவின் தோழி ஒருவர், திவ்யா பாண்டே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றதாகவும், இந்திய அளவில் 323-வது ரேங்கில் தேர்வாகி இருப்பதாகவும் அழைத்துச் சொல்லியிருக்கிறார்.
இருப்பினும் இதனை உறுதி செய்வதற்கு திவ்யா குடும்பத்தினர் முற்பட்டபோது, இன்டர்நெட் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியதர்ஷினி தோழி கூறியதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் தோழி சரியாக தான் சொல்லியிருப்பால் என்ற நம்பிக்கையில், அதனை உண்மையென நம்பி அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, எந்தவித கோச்சிங்கும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் திவ்யா பாண்டே தேர்ச்சி பெற்றது மீடியாவின் கவனத்தை ஈர்த்தது. இந்தச் செய்தி பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகமும், மத்திய நிலக்கரி சுரங்க அதிகாரிகளும் அழைத்து திவ்யா பாண்டேவைப் பாராட்டினர்.
இந்த நிலையில், இந்த தகவலை உண்மை என்று நம்பிய திவ்யா, டெல்லிக்குச் சென்ற போதுதான் அது உண்மையில்லை எனத் தெரிந்திருக்கிறது. இந்திய அளவில் தேர்ச்சி 323-வது ரேங்க் பெற்ற திவ்யா, தென்னிந்தியாவைச் சேர்ந்த திவ்யா.பி என்றும், அது திவ்யா பாண்டே இல்லையென்றும் புரிந்தது.
இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பொய்யான செய்தியைப் பரப்பும் எந்தவிதமான உள்நோக்கதிலும் தாங்கள் செயல்படவில்லை என்றும், இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திவ்யா பாண்டேவின் குடும்பத்தினர் மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் தாங்கள் எடுக்கப் போவதில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!