Viral

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சைபர் அட்டாக்.. 60 கோடியை அபேஸ் செய்த ஹேக்கர்கள் - பின்னணி என்ன?

இந்தியாவில் சமீபகாலமாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் பொதுமக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதைப் பயன்படுத்த வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளினால் அதிக இழப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், கிரிப்டோ முதலீட்டாளர் ஒருவர் தன்னுடைய 5,000 எதிரியம் காயின்களை திரும்பப்பெற முடியால் தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த நபர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆக்ஸி இன்ஃபினிட்டி ஆன்லைன் கேமுடன் இணைக்கப்பட்ட பிளாக்செயின் இயங்கு தளமான ரோனினிலிருந்து 1,73,600 அமெரிக்க டாலர் மதிப்பு எதிரியம் மற்றும் 25.5 மில்லியன் யு.எஸ்.டி.சி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை, ரோனின் தளத்திலிருந்து தனிப்பயன் செய்யப்பட்ட புரோகிராம்கள் மூலம் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஹேக்கர்களால் நடத்தப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய சைபர் அட்டாக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”உங்களது அன்புக்கும், கனிவுக்கும் நன்றி” - அஜித்குமார் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் : எதற்கு தெரியுமா?