Viral
உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த பெண்; அதிர்ச்சி கொடுத்த போலிஸ் - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துவிட்டு அது வீடு வந்து சேர்வதற்குள் வாடிக்கையாளர் தவித்து போகும் சுபாவம் உலகெங்கிலும் இருப்பது வழக்கம்.
அவ்வகையில் அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோடா பகுதியில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் 5 மில்லியனுக்கும் மேலானா பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி 25ம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் டோர் டேஷ் மூலம் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு அவரிடத்திற்கு வந்து சேரவில்லை.
இந்நிலையில், வீட்டின் காலிங்பெல் அடித்த போது டெலிவரி நபராக இருக்கும் என கதவை திறந்து பார்த்த அந்த பெண்ணிற்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் காத்திருந்தது. அதாவது உணவை கொண்டு வந்தது சியோக்ஸ் ஃபால்ஸ் போலிஸ் அதிகாரி.
ஏனெனில் டோர் டேஷ் டெலிவரி பாய் உணவை பிக்கப் செய்து எந்த ஆவணமும் இன்றி வந்துக்கொண்டிருந்த போது தணிக்கையில் இருந்த போலிஸாரிடம் சிக்கியிருக்கிறாராம். இதனால் அந்த நபரை சியோக்ஸ் ஃபால்ஸ் போலிஸார் கைது செய்திருக்கிறார்.
ஆனால் அவர் பிக்கப் செய்த உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணத்தில் அந்த போலிஸ் அதிகாரி பெண்ணின் வீட்டுக்கேச் சென்று உணவை கொடுத்திருக்கிறார்.
இதனால் நெகிழ்ந்து போயிருக்கிறார் அந்த பெண். மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்கெனவே அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்திருக்கிறது.
அந்த வீடியோதான் Tea Storm Chasers என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு லைக்ஸ்களையும் வியூஸ்களையும் அள்ளி வருகிறது. இதுபோக போலிஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்