Viral
“காலநிலை மாற்றப் பேரழிவில் இருந்து பூமியை காப்பாற்ற கடைசி வாய்ப்பு” : நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு!
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து நேற்று மக்களவையின் குறுகிய நேர விவாதத்தின்போது கனிமொழி எம்.பி உரையாற்றினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ஆற்றிய உரை பின்வருமாறு :
காலநிலை மாற்ற நடவடிக்கையில், நடைமுறையில் ஒன்றிய அரசின் தயாரிப்புக்கும், அவர்களின் அறிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான நமது இலக்கின் 20 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கூட இந்த அரசாங்கம் உற்பத்தி செய்யவில்லை. இந்தியா நிகர பூஜ்ஜியத்தைப் பற்றி பேசினாலும், நாட்டின் 51 சதவீத எரிசக்தி தேவைகள் நிலக்கரி மின்சாரத்தில் இருந்து பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. சென்னை பருவநிலை மாற்றத்தின் சீற்றத்தை அனுபவித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நகரில் வெள்ளப்பெருக்கு தொடர்கதையாகி வருகிறது. நீர்நிலைகள் அதிகரித்து ஊரை விட்டு வெளியேற வழியின்றி மீன்வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
காலநிலையின் விளைவுகளை முதலில் கண்டவர்கள் நாங்கள்தான், கடைசியாக பூமியை அதன் பேரழிவு தாக்கத்திலிருந்து காப்பாற்றும் வாய்ப்பை நாங்கள் காண்கிறோம். காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆலோசிக்க 2015ல் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்குச் செல்வதற்கு முன் பிரதமர் மோடி அந்தக் குழுவை சந்தித்து கலந்தாலோசிக்கவில்லை.
கிளாஸ்கோவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி” என்ற எனப் புகழ்ந்து பேசியதாக எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்துப் பேசிய பா.ஜ.க எம்.பி டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியா பூமியின் நிலப்பரப்பில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கு ஊக்கமளிக்கும் கொள்கையை வகுத்தது. ஆனால் தேசிய அளவில் அத்தகைய கொள்கை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!