Viral
கண்களை மூடினால் தெரிவது என்ன நிறம்? Eigengrau எதை குறிக்கிறது?
பொதுவாக கண்களை மூடினால் தெரிவது கருப்பு நிறம் அல்லது இருள் என்றுதான் கூறுவது வழக்கம். ஆனால், உண்மையில் தெரியும் நிறம் என்னவோ அடர் சாம்பல் நிறமாகத்தான் இருக்கும். அதாவது Eigengrau.
கண் இமையின் உட்புறம் கருப்பாக இல்லாத போது கண்களை மூடினால் மட்டும் கருப்பாக தெரிவது ஏன் என்ற கேள்வி பொதுவாக எழுகிறது.
Eigengrau மற்றும் அதன் இருப்பு மாயத்தோற்றம் இருப்பதாக இணைக்கப்படுகிறது. இது உயிரியல், உடலியல் மற்றும் நோயியல் அல்லாத வகையின் ஒரு மாய நிகழ்வு என்று கருதப்படுகிறது. இந்த கருதுகோளுக்குக் காரணம், உண்மையில் ஒரு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத ஒன்றுடன் உணர்வதாக உள்ளது.
அதன்படி, கண்களை மூடும்போது நிகழும் ஒளியற்ற நிலையையே Eigengrau உணர்த்துகிறது. அறிவியல் ரீதியில் இதனை Visual Noise அல்லது Background Adaptation என கூறுவதுண்டு.
உயிரியல் ஒளிர்வின் (BioLuminescence) மூலம் Phosphenes மூலமும் மின்மினி பூச்சி போல கண்கள் ஒளியில் மின்னும். அப்போது 15 வகையிலான Phosphenes-கள் வடிவத்தில் வருவதை உணர முடியும். அதன் காரணமாகவே கண்களை இறுக மூடிய பிறகு சில நொடிகளுக்கு காண்பதெல்லாம் வண்ணமயமாக தெரிவதை உணர முடியும்.
அதேபோல கண்களை தேய்க்கும் போதும் ஒளியை உணர முடியும். அந்த நேரத்தில் Visual Hallucination எனும் மாயை நிகழும். Nightmare, Hypnagogia போன்றவற்றின் மூலம் மாய பிம்பங்கள் மற்றும் சாத்தியமில்லாத நிறங்கள் ஏற்படுவதும் காரணமாக அமைகிறது. மேலும், கண்களை மூடுவதனால் மூளையின் காட்சி பகுதி மூடப்பட்டுவிடாது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!