Viral

2 வேளை பிரியாணிக்கு 27 லட்சம் செலவா? நியூசி., வெளியேறியதை விட இதுதான் குடைச்சல் - புலம்பும் பாக்.,வாரியம்

பாகிஸ்தானில் நடைபெற இருந்த 3 ஒரு நாள் மற்றும் 5 T20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருந்தது.

ஆனால் தங்களது வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்து தாயகம் திரும்பியது. இதனால் நொந்து போயிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

என்னவெனில், கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வந்த நியூசிலாந்து அணியினர் தங்கியிருந்த இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா சொகுசு விடுதியை சுற்றி பாதுகாப்பு அளிக்கும் வகையில் 500 போலிஸார் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அனைவருக்கும் இரண்டு வேளையும் பிரியாணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான 27 லட்சம் ரூபாய் கொண்ட பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டுதான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியடைந்திருக்கிறது,.

இதுபோக, 27 லட்சம் ரூபாய் வெறும் பிரியாணிக்கான பில் மட்டும்தான் எனவும் இதர செலவினங்களுக்கு தனித்தனியே பில் போடப்பட்டுள்ளது எனவும் ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களையெல்லாம் கிரிக்கெட் வாரியம் எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லீஸ்-க்கு விட்டு லட்சக்கணக்கில் சுருட்டல்: பாஜக நிர்வாகி அதிரடி கைது!