Viral
“தொண்டர்களை கொரோனாவுக்கு பலி கொடுக்க நினைக்கும் EPS - OPS?” : கேலிக்கூத்தாக நடந்த அ.தி.மு.க போராட்டம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றதற்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை மாற்றுக் கட்சியினர் பலரும் பாராட்டுவதோடு தங்களை தி.மு.கவுடன் இணைத்துக்கொண்டு வருகின்றனர்.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.கவின் இரட்டை தலைமை கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் மாவட்டங்கள் தோறும் தி.மு.கவில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.
இது அ.தி.மு.க தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் அ.தி.மு.கவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு இது மற்றொரு தலைவலியாக அமைந்துள்ளது.
இதனால் கட்சியைக் காப்பாற்ற முடியாத விளிம்பு நிலையில் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் உள்ளதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. ஒருபுறம் கட்சிக்கு ஆபத்து என்றால், மறுபுறம் ஊழல் வழக்குகளில் அ.தி.மு.கவின் முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, அடுத்தமுறை ஆட்சிக்கு வரமாட்டோம் எனத் தெரிந்தே கிடைத்தவரை பணத்தை கொள்ளையடித்து செட்டில் ஆகிவிடவேண்டும் என மக்கள் பணத்தை சுருட்டிய அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் ஊழல் - முறைகேடு வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர்.
மேலும் பலரின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், பலரும் கதிகலங்கியுள்ளதாக அவர்களின் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தங்கள் மீது ஊடகங்களில் வாயிலாக வெளிவரும் ஊழல் செய்திகளையும், கட்சி அதிருப்தி நடவடிக்கையையும் திசைதிருப்பவே தி.மு.க அரசுக்கு எதிராக வேடிக்கையாக போராட்டத்தை அறிவித்துள்ளது அ.தி.மு.க தலைமை.
இந்தியாவிற்கே முன்னோடியாக அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வரும் வேளையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது தொண்டர்கள் தனிமனித இடைவெளிக்காக வட்டம் போட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அ.தி.மு.க தலைமை கூறியுள்ளது. ஆனால், அ.தி.முக தொண்டர்களோ தனிமனித இடைவெளி என எதையும் கடைபிடிக்காமல் போட்டுவைத்த வட்டத்திற்குள்ளும் நிற்காமல் கூட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பலரும் அ.தி.மு.கவினரின் இத்தகைய கோமாளித்தனமான போராட்டத்தை விமர்சித்துள்ளனர்.
மேலும் கொரோனா பரவலை தமிழ்நாடு அரசு தற்போதுதான் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி தொற்றுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வேலையை இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற அ.தி.முகவினரின் கேலிக்கூத்துப் போராட்டத்தில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால் அப்பாவி தொண்டர்களை போராட்டத்திற்கு தள்ளிவிட்ட அ.தி.மு.க தலைமை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!