Viral

“கொரோனா வைரஸ் சீனாவால் பரப்பப்பட்டதா?” : ‘Bio Weapon’ சூழ்ச்சி குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாவது அலையை எட்டியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை தனது கோரத்தாண்டவத்தை ஆடிவருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் கொரோனா வைரஸ் உருவானது தொடர்பான ஆய்வுப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்து வெளியாகும் ஆய்வு கட்டுரைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அப்படி சமீபத்தில் கொரோனா உருவான இடம் பற்றி வெளியான ஆய்வுகளின் அடிப்படையில், அமைந்த தரவுகள் பற்றிய தொகுப்பே இந்த கட்டுரை.

கடந்த மே 26ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முக்கியமான அதிகாரியை அழைத்து, ஒரு ஆவணங்களை கொடுத்து இதில் உள்ள தகவல் உண்மையானதா என்பதைக் கண்டறித்து இதுதொடர்பான ஆய்வு அறிக்கையை மூன்று மாதத்திற்குள் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த ஆவணங்கள் பற்றி தெரிந்த முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப், சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சுமார் 730 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை சீனாவிடம் இருந்து பெறவேண்டும் என வலியுறுத்திருந்தார். அதுமட்டுமல்லாது, உலகத்தில் உள்ள மிக முக்கிய உயிரியல் வல்லுநர்கள் பலரும் இந்த ஆவணங்களில் நிறைய உண்மைகள் சொல்லப்பட்டிருக்கிறது என்று உறுதியாக கூறுகிறார்கள்.

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகையே கட்டுப்போட்டு வைத்திருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. சீனாவின் எந்த பகுதியில் இருந்து, எப்படி பரவியது அல்லது பரப்பப்பட்டிருந்தால் எப்படி பரப்பட்டது என்கின்ற பல தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உலகின் பல நாடுகளில் இருக்கக்கூடிய, சில தனிநபர்கள் ஒன்று சேர்ந்து பல முக்கியமான தரவுகள் மற்றும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

DRASTIC - (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) என்ற குழுவின் புலானாய்வாளர்களில் ஒருவர் இந்தியர். தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல், ட்விட்டரில், The Seakar என்ற பெயரில் இயங்கி வருகிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் தனது குழுவுடன் சேர்ந்து கொரோனா பற்றிய பல ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

சீனாவின் வூஹான் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாகவும், வௌவால்களிடம் இருந்து அலங்கு (Anteater) எனும் எறும்புண்ணிகளுக்கு இந்த தொற்று பரவி மனிதர்களிடம் வந்தது என்பது கொரோனாவின் பிறப்பு குறித்து சீனா கூறும் தகவல். ஆனால் இதனை நம்புவதற்கு பலரும் மறுத்துள்ளனர்.

அதற்கு சில காரணங்களையும் முன்வைத்துள்ளனர். அதில் முக்கியமான விஷயமாக வூஹான் நகரத்தில் இறைச்சி சந்தை அருகே சீன அரசின் வைரஸ் ஆய்வுக்கூடம் ஒன்று உள்ளது. ஆனால், வௌவால் வசிக்கும் குகைகள் 1000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. அதுமட்டுமல்லாது, அந்த இறைச்சி சந்தையில், வௌவால் இறைச்சியே விற்கப்படாத போது எப்படி வைரஸ் பரவி இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்வியை மையமாகக் கொண்டு, DRASTIC குழுவினர் தங்களுடைய விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பான அந்த குழு வெளியிட்ட தகவலில், சீனாவின் BAT WOMAN என்று அழைக்கப்படுகிற பெண் ஷி ஜெங்லியின் Shi Zhengli’s. இவர்தான் சீனாவின் வூஹான் ஆய்வகத்தின் தலைவராக உள்ளார். இவர் கொரோனா தொடர்பாக மூன்று ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள ஒரு தரவு தான் விசாரணை குழுவிற்கு புதிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதாவது தனது கட்டுரையில், கொரோனா வைரஸை உருவாக்கும் SARS-CoV-2 என்ற வைரஸ் இதுவரை நாம் பார்க்காத வைரஸாக உள்ளது. அதுமட்டுமல்லாது sars நோயை உருவாக்கிற வைரஸ் கூட இதுபோன்று இல்லை. மேலும் இந்த வைரஸின் மரபணுவை ஆய்வு செய்தபோது, RaTG13 என்ற வைரஸ் தான் மிக நெருக்கமாக உள்ளது. மற்றபடி எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த RaTG13 என்ற வைரஸ் பெயர் இதுவரை கேள்விப்படாத பெயராக உள்ளது என மேற்கு வங்க புலானாய்வாளர் இதுதொடர்பாக தேடிப் படித்து ஆய்வு செய்துள்ளார். அப்படி கிடைத்த தகவலின்படி, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இறந்தனர். அது மட்டுமின்றி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நோய் பற்றி ஆய்வு செய்வதற்கு ஷி ஜெங்லி அங்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பான தகவலை தேடியபோது எங்குமே கிடைக்காத நிலையில், கிங்மிங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கட்டுரை ஒன்று கிடைத்துள்ளது. அதில், அந்த சுரங்கத் தொழிலாளர்கள் ஆறுபேருக்கு அளித்த சிகிச்சை குறித்த கட்டுரையில், சீனா லாட வௌவால்கள் மூலம் தொற்றிய சார்ஸ் போன்ற வைரஸ் இது என்று அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வைரஸ் மாதிரிகளையும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதேவேளையில் மோஜியாங் சுரங்கத்தை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற முக்கிய ஊடகங்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது சீன அரசு. மேலும் அந்த சுரங்கத்திற்குள் யாரையும் அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.

இதனிடையே வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவலில், மோஜியாங் சுரங்கத்திற்கு சீனாவின் பல ஆராய்ச்சியாளர்கள் சென்று ஆய்வு செய்துள்ளதாகவும், அங்கிருந்து வைரஸ்களை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து RaTG13 வைரஸ் மட்டுமின்றி 9 வகையான வைரஸ்களை எடுத்துவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வைரஸ்களை ஆய்வகத்திற்கு கொண்டு வந்து, இந்த வைரஸ்களை மனிதர்களுக்கு பரப்பும் விதமாக மாற்ற முடியுமா? அப்படி பரப்பும்போது அது எவ்வாறு உருமாற்றமடையும் என்பது பற்றி பறிசோதித்துள்ளனர்.

எலிகளிடம் இத்தகைய சோதனைகளை நடத்தி வைரஸை வீரியமுள்ளவையாக மாற்ற முயற்சித்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் உள்ள Spike புரதம் தான் எளிதில் மனிதர்களுக்கு தொற்ற வழிவகை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வௌவால்களிடம் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்கூடத்தில் வைரஸ் பரப்பப்பட்டிருக்கலாம் என்பது நோய் அரசியல் நிபுணர்களின் கருத்து. ஆனால், எதிர்காலத்தில் மனிதர்களை அச்சுறுத்தக்கூடிய நோய்களுக்கு மருந்து கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக சீனா கூறுகிறது.

சீனாவின் கருத்தை எதிர்த்து உயிரி ஆயுதமாக இந்த வைரஸை உருமாற்றவே ஆராய்ச்சி நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகிறது. உயிரி ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தும் மூன்றாம் உலக போரை சீனா விஞ்ஞானிகள் யோசித்து பார்த்திருப்பதாக திடுக்கிடும் தகவல்களையும் ஆஸ்திரேலியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான ஆவணங்கள் தொடர்பாக சீனா வெளிப்படையாக செயல்பட வேண்டும் என அமெரிக்கா சீனாவை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக வூஹான் மாகணத்தில் உள்ள 2 பல்கலைக்கழங்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், குளிர் காலத்தில் குகையைவிட்டு வெளிவாரத வௌவால் மூலம் எப்படி வைரஸ் பரவி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பாதுகாப்பு இல்லாத சூழலில் இங்கு வைரஸ் கையாளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது அந்த ஆய்வுக்கட்டுரை!

அந்த கட்டுரை வெளியான சில மணிநேரங்களில் நீக்கப்பட்டுள்ளது. இதேகுற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில், தென் சீன பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப நிபுனர் போடவ் ஜியா என்பவர் வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாகவும் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். சில நாட்களில் அந்த கருத்தை திரும்பவும் பெற்றார் போடவ் ஜியா.

சீனாவில் இருந்து பரவியதாக தன்னார்வலர்களின் ஆய்வுகள் கூறுகையில், அமெரிக்காவின் மிகவும் முக்கியமான கொரோனா ஆய்வாளர் ஜெசி ப்ளூம் இதனை உறுதி செய்துள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு பல்கலைக்கழங்களின் ஆய்வாளர்கள் வூஹான் ஆய்வு நிறுவனத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று சீனா தனது பக்கம் தவறுகள் இருப்பின் ஏற்றுக்கொள்ளவேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: “முத்தான முதல் 30 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகள்..!” : சிறப்பு செய்தி தொகுப்பு !