Viral
வீட்டிலேயே காசோலை தயாரித்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய நபர் - ஷோரூம் நிர்வாகிகள் அதிர்ச்சி!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கேசி வில்லியம்ஸ் என்ற நபர் அவரே வீட்டில் தயார் செய்த போலி காசோலைகள் மூலம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒகலூஸா நகரில் உள்ள போர்ஷே கார் ஷோரூமுக்குள் சென்ற கேஸி வில்லியம் கெல்லி என்ற 42 வயதான நபர், போர்ஷே 911 டர்போ காரை வாங்கியுள்ளார். அந்த காருக்கான பணத்தைக் காசோலை மூலமாகச் செலுத்தியுள்ளார். அந்த காசோலையை ஷோரூம் நிர்வாகம் வங்கியில் செலுத்தியபோது, அது போலி காசோலை என்பதும் இதன் மூலமாக கெல்லி 1 கோடியே 4 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கார் திருட்டு போனதாக ஷோரூம் நிர்வாகம் ஒகலூஸா காவல்துறையில் புகார் அளித்தது. இந்த காரை வாங்கி ஓட்டிச் சென்றதோடு மட்டுமில்லாமல், கெல்லி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் காரோடு நிற்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் போர்ஷேவை வாங்கிவிட்டு ஒரு கடிகாரக் கடைக்குச் சென்று மூன்று விலையுயர்ந்த ரோலக்ஸ் கை கடிகாரங்களையும் வாங்கியுள்ளார். இந்த கடிகாரங்களின் விலை இந்திய மதிப்பில் 46 லட்சமாகும். அதற்கும் அவர் காசோலையின் மூலமே பணம் செலுத்தியுள்ளார்.
பின்பு கெல்லியை காவல்துறை விசாரித்தபோது அந்த காசோலைகளை போலி என ஒப்புக்கொண்டார். அதை எங்கே வாங்கினீர்கள் என்று காவல்துறையின் கேள்விக்கு தானே வீட்டில் தயாரித்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது வழக்குப் பதிவு செய்து கெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!