Viral
ரெயின்கோட் என்று நினைத்து கொரோனா PPE கவச உடையைத் திருடியவர் தொற்றுக்கு ஆளான சோகம் !
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவ பணியாளர்கள் அணியும் தனிநபர் பாதுகாப்பு ஆடையை(PPE) மருத்துவமனை ஒன்றிலிருந்து திருடிச்சென்று அதன் மூலமாக கொரோனா தொற்றுக்கு ஒருவர் ஆளாகியுள்ளார்.
காய்கறி வியாபாரம் செய்யும் அந்த நபர், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சிறிய விபத்தின் காரணமாகக் காயமடைந்துள்ளார். அதற்காக சிகிச்சை பெற நாக்பூர் நகரின் மாயோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா மருத்துவ பணியாளர்கள் உபயோகப்படுத்தும் பாதுகாப்பு உடையைக் கண்டுள்ளார். அதைக் கண்டவுடன் ரெயின் கோட் என்று நினைத்த இவர் அதைத் திருடியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்றபோது அனைவரிடமும் அதன் விலை 1000 ரூபாய் என்றும் அதைத் தான் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கேட்டவர்கள் சிறிது சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பின் அது ஒரு கொரோனா பாதுகாப்பு கவசம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து அந்த பாதுகாப்பு உடையைக் கைப்பற்றி தீ வைத்து கொளுத்தினார்கள்.
பின்பு அந்த நபரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்குக் தொற்று இருப்பது உறுதியானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்தினருக்குத் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !