Viral
''சிம்ரன் முதல் ஐஸ்வர்யா வரை...'' ஊரடங்கு வாழ்வில் இதுதாங்க ட்ரெண்ட் : 'டல்கோனா' காபி செய்வது எப்படி?
காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதிய வகை காபி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ‘டல்கோனா காபி’ என்று பெயர். ஏராளமானோர் அந்த காபியின் புகைப்படங்களையும், காபி தயாரிக்கும் முறையையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள்.
நடிகை சிம்ரன் தனது மகன் தயாரித்த டல்கோனா காபியை இணையவெளியில் வெளியிட்டு ஊரடங்கு வாழ்வின் புதிய சுவையை அறியுங்கள் என ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதுபோன்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வீட்டில் டல்கோனா காபி தயாரிப்பது எப்படி என செயல்முறை விளக்கம் கொடுத்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் இணையவெளியில் தங்கள் வீட்டில் செய்த டல்கோனா காபியை பற்றிச் சிலாகித்து வருகின்றனர்.
இதுஇப்படி இருக்க இந்த டல்கோனா காபி குறித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையவெளியில் பரவி வருகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஊரடங்கு வாழ்வில் வீட்டில் இருந்தபடி நாமும் டல்கோனா காபி எப்படி தயாரிப்பது என்று கற்றுக் கொள்ளலாமா?
டல்கோனா காபி தயாரிக்க தேவையான பொருட்கள்:
காபி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
சுடுநீர் - 2 டேபிள் ஸ்பூன்
பால் - அரை டம்ளர்
ஐஸ் கட்டி - சிறிதளவு
செய்முறை:
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள். வாய்அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள். அடிக்க அடிக்க நுரை பொங்க கெட்டியான கலவை உருவாகும். அந்த கலவை கிரீம் போன்று இருக்கும்.
தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும். பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கினால் டல்கோனா காபி தயார்.
இந்த டல்கோனா காபி தான் ஊரடங்கு வாழ்க்கையின் புதிய ட்ரெண்டாக உருவாகியுள்ளது.
Also Read
-
மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
-
குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெறாத ’சோசலிஸ்ட்’, ’மதச்சார்பற்ற’ சொற்கள் : டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு!
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!